குப்பை வாகனங்கள் போக்குவரத்தை தடுத்து மக்கள் முற்றுகை திருவனந்தபுரம், பிப். 15- விளாப்பிசாலா பகுதியில் திடக்கழிவு சுத்திகரிப்பு ஆலை யை மீண்டும் தொடர நகர நிர்வாகம் மேற்கொண்ட முயற்சியை முறியடிக்கும் வகையில், விளாப்பிசாலாவில் 10 ஆயிரம் மக்கள் திரண்டு குப்பை லாரிகள் போக்குவரத்தை மறித்தனர். அவர்கள் கலைந்து செல்ல, கண்ணீர்ப்புகைக்குண்டுகள் மற்றும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சம்பவ இடத்தில் 500 காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். ஜனவரி மாதம் 23ம் தேதியன்று கேரள உயர்நீதிமன்றம், விளாப்பிசாலா சுத்திகரிப்பு ஆலைக்கு, குப்பைக் கழிவுகளைக் கொண்டு செல்ல இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த இடத்தில் பாதுகாப்பு அளிக்கவும், காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஸ்ரீகந்த சாஸ்தா ஆலயம் முன்பாக போராட்டக்காரர்கள் திரண்டிருந்தனர். இந்தப்போராட்டத்தில் குழந்தைகளுடன் பெண்கள் பங்கேற்றனர். விளாப்பிசாலா ஜனகீய சமிதி (மக்கள் சங்கம்) சார்பில் போராட்டக்காரர்கள் திரண்டிருந்தனர். திங்கட்கிழமை மதியம் 2 குப்பை லாரிகள், காவலர்கள் பாது காப்புடன் விளாப்பிசாலா வந்தது. போராட்டத்திற்கு முன்னணி வகித்த நபர்களை, காவலர்கள் கைது செய்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். காவலர்கள் தங்களது முற்று கையை தகர்க்கக்கூடாது என சால்வை, புடவைகளால் தங் களை இணைத்துக் கட்டியிருந்தனர். மதிய நேரத்தின்போது, கைது நடவடிக்கையை காவலர்கள் நிறுத்தி வைத்தனர். அப்போது மக்கள் சங்கத்தினர் போராட்டக் காரர்களுக்கு கஞ்சி கொடுத்தனர். கைது செய்யப்பட்ட, போராட்டக்காரர்கள் விளாப்பிசாலா சந்திப்பில் உள்ள அரசு மேல்நிலை துவக்கப்பள்ளிக்கு கொண்டுசெல்லப்பட்டனர். 3வது காவலர் வாகனத்தை போராட்டக்காரர்கள் நிறுத்தியபோது சிறிய வன்முறை ஏற்பட்டது. இந்தநிலையில் விளாப்பி சாலா மற்றும் விலவூர்கல் பஞ்சா யத்துப் பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தடை உத்தரவு பிறப்பித்தார். போராட்டத்தால் குப்பைக்கழிவு போக்குவரத்து அன்றைய தினம் நிறுத்தப்பட்டது.

Leave A Reply