கிழக்கு மண்டலத்தின் முதல் துலீப் கோப்பை வெற்றி அறியப்படாதவர்களின் அபார வெற்றி என்று இந்த வெற்றியைக் கூறலாம். கிழக்கு மண்டலம், மண்ட லங்களுக்கிடையேயான கிரிக்கெட் சாம்பியன் அணிக்கு வழங்கப்படும் துலீப் கோப்பையை முதல் முறையாக வென்றுள்ளது. மத்திய மண்டலத்தை இரண்டரை நாட்கள் மீத மிருக்க ஒரு இன்னிங்ஸ் 20 ஓட்டங்களில் கிழக்கு மண் டலம் வீழ்த்தியது. இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் தனது இரண்டாம் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 88 ஓட்டங்கள் எடுத்திருந்த மத்திய மண்டலம், மூன் றாம் நாளன்று 217 ஓட்டங் களுக்கு ஆட்டம் இழந்தது. எந்தப்பந்தை எப்படி அடிப்பது? எந்தப்பந்தை விடுவது? என்று தேர்வு செய்வதில் மத்திய மண்டல வீரர்கள் தவறு செய்தனர். முகமது கைப், ராபின் பிஸ்ட் ஆகிய இருவரும் புல் ஷாட் ஆடப்போய், ஆட்டம் இழந்தனர். சந் தித்த பந்துகளையெல்லாம் ஜலஜ் சக்சேனா அடிக்க முயன்று வெளியேறினார். இந்த மட்டங்களில் ஆடும் வீரர்கள் தவறு செய்தால் என்ன செய்வது? என்று வருத்தப்பட்ட அணித்த லைவர் பியுஷ் சாவ்லாவும் அதேபோல் தவறிழைத்து ஆட்டமிழந்தார். கிழக்கு மண்டல வேகப் பந்து வீச்சாளர்கள் அபார மாகப் பந்து வீசினர். திண்டா மூன்று விக்கெட்டு களையும் ஷாமி நான்கு விக் கெட்டுகளையும் வீழ்த்தி னர். சுழற்பந்தாளர் நதீமும் இரண்டு பேரை வெளியேற் றினார். நமன்ஓஜா (36), மோனீஷ் மிஸ்ரா (44), ராபின் பிஸ்ட் (20) ஆகி யோரின் தொடக்கம் நன் றாக இருந்தது. ஆனால் அவர்கள் இருபது 20 கிரிக் கெட் போல் அவசரம் காட்டி ஆட்டம் இழந் தனர். ஆடு தளத்தை தயாரித்த ராஜஸ்தானின் தபோஷ் சாட்டர்ஜி பாராட்டப்பட வேண்டியவர். மட்டையா ளர்களுக்கும் பந்து வீச்சா ளர்களுக்கும் ஏற்ற வகை யில் தளம் தயாரிக்கப்பட்டி ருந்தது. இதுபோன்ற தளங் கள் இந்தியாவில் கூடுதலாக இருந்தால், அந்நிய மண் ணில் சங்கடமான தோல்வி களைத் தவிர்க்க முடியும்.

Leave A Reply