ஏ.வி.முருகையன் நாகை அழைக்கிறது ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் கிழக்குத் தஞ்சையான நாகை, திருவாரூர் மாவட்ட மக்களில் 98 சதவீத மக்கள் மனிதர்களாகவே, சில மனிதர்களால் மதிக்கப்படாமல் இருந்தார்கள். எத்தகை யக் கொடுமைகள் நடந்தாலும் ஏன் என்று கேட்க முடியாத அடிமைகளாக-கூலிகள் என்று கூடச் சொல்லத் தகுதி யற்றவர்களாக வாழ்ந்தார்கள். சலவைத் தொழிலாளிகளை வண் ணான் என்றும், முடிதிருத்துபவர்களைப் பரியாரிகள், அம்பட்டர்கள் என்றும், தச்சு வேலை செய்பவர்களை ஆசாரி என்றும், துப்புரவு ஊழியர்களைத் தோட்டி, தொம் பன் எனவும், மயானம் காப்பாளர்களை வெட்டியான், பறையன் என்றும் சாதிக் குச் சாதி இத் தொழிலாளர்கள் பிரிக்கப் பட்டு, நிலச் சுவான்தார்கள் இஷ்டப் பட்டுக்கொடுக்கும் கூலியை பெற்று, வாயிருந்தும் ஊமைகளாக வாழ்ந்தார்கள். இவர்கள் வாழ்வதே நிலச் சுவான்தார் களின் சுகபோக வாழ்க்கைக்குத் தான் என நடந்து கொண்டிருந்த காலத்தில் தான்- 1938களில் மணலூர் மணியம்மை போன்ற மனிதநேயம் மிக்க மாமனிதர்கள் தோன்றி, சேரிகளுக்குச் சென்று சேற்றில், சகதியில் அடிமைகளாகக் கூனிக்குறுகி வாழ்ந்தவர்களையெல்லாம் ஒன்று படுத்தினார்கள். தொடர்ந்து 1943ம் ஆண்டு, கிழக்குத் தஞ்சை மாவட்டத் திலுள்ள தென்பரையில் செங்கொடி பறக்கத் தொடங்கியது. பி.சீனிவாசராவ் என்ற செவ்விய மனிதர் ஏற்றி வைத்த செங்கொடி உழைப்பாளி மக்களை உசுப் பியது, ஒன்றுபடுத்தியது. அடிமைகளாய் உழன்றவர்கள், அமாவாசை இருளில் இருந்து வெளிச்சத்திற்கு வந்ததாகத் தன்னைத் தானே பார்த்துப் பரவசம் அடைந்தார்கள். காலம்பூராவும் உழைத்து பண்ணை யார்களுக்குக் கொடுத்துவிட்டு, கால் வயிற்றுக் கஞ்சிக்குக் கூட வழியில் லாமல் இருந்தவர்களைச் செங்கொடி இயக்கம் ஊர் ஊராகச் சென்று ஒன்று படுத்தியது. கூலி உயர்வு வேண்டும் என்கிற குரல் ஒலிக்க ஆரம்பித்தது. சாகுபடியாளர்கள் குத்தகைபேசி சாகுபடி செய்ய ஆரம்பித்தார்கள். குத்த கை வாரம் பேசப்பட்டது. களத்து மேட்டி லேயே குத்தகை நெல் அளக்கப்பட்டது. ஏற்க மறுத்தால், “எடுத்தால் எடுத்துக் கொள், இல்லையென்றால் பண்ணையார் பாகம் களத்திலேயே கிடக்கும்” என் றார்கள். அடிமைகள் கூலிகளானார்கள். இன்றுள்ள 1 கிலோ நெல் அன்றைய 2 படி. அதுதான் தினக்கூலி. இவர்கள் குடியிருக்கும் இடம் பண்ணையார்களுக்குச் சொந்தம். பிறக்கும் பிள்ளைகளும் அவர்களுக்கு அடிமை வேலை செய்ய வேண்டும். இந்த நிலையிலிருந்து, “என் பிள்ளை என்ன செய்ய வேண்டும்” என முடிவெடுக்கும் உரிமையைச் செங்கொடி இயக்கம் பெற்றுத்தந்தது. 1960க்குப் பிறகு பண்ணையாள் பாது காப்புச் சட்டம், முத்திரை மரக்காலில் கூலி… இவர்களின் பிள்ளைகள் திரு மணங்களைக் கூடப் பண்ணையார்கள் தான் தீர்மானிப்பவர்களாக இருந்தார்கள் என்ற கொடுமைகளையெல்லாம் மாற்றி யது செங்கொடி இயக்கம். 1964க்குப் பிறகு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தொய்வில்லாமல் – கொண்ட கொள்கையில் கொஞ்சம் கூட சமரசம் இல்லாமல், உழைப்பாளி மக்க ளின் உண்மைக் காவலனாய் வீறு நடை போட்டு, வங்கத்திலும் கேரளத்திலும் உழைப்பாளி மக்களின் ஆட்சி மலர்ந்தது. கூலி உயர்வுப் போராட்டம் நடந்து கணபதியா பிள்ளை கமிஷனையும், கார்த்திகேயன் கமிஷனையும், கோலப் பன் குழுவையும் ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், மனித குலத்தில் அழிக்கப்படாமல் உள்ள தீண்டாமைக் கொடுமையை எதிர்த்து நடத்திய இயக்கம், இன்றும் செட்டிப்புலமும் வாட்டாக்குடியும், சியாளமும், மாத்தூரும் நாகை மாவட்ட மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. ‘சாதி சாதி’ என்று சாதிக்காகக் குரல் எழுப்பியவர்கள் தங்கள் சுய நலத்தைச் சாதித்துக் கொண்டார்கள். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் சாதியக் கொடுமைகளை எதிர்த்துத் தொடர்ந்து போராடி வருகிறது. உழைப்பாளி மக்களின் வறுமையைப் போக்க, வாழ்வைப்பெற, மனிதனாக மதிக்கப்பட வைக்க, கல்வி கிடைக்க, குடிமனை கிடைக்க, ஏழை மக்கள் – தாழ்த்தப்பட்ட மக்கள், விவசாயிகள்- விவசாயத் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சாலை, குடிதண்ணீர், ஏன், மயானத்திற்கான போராட்டங்கள் உட்பட பல போராட்டங்களையும் முயற்சிகளையும் செங்கொடி இயக்கம் செய்துள்ளது. தமிழகம் முழுவதும் பலர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர் என்றாலும் கிழக்குத் தஞ்சை மாவட்டத்தில் இரணிய னும் சிவராமனும் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். களப்பால் குப்பு சிறைச் சாலையிலேயே விஷமிட் டுக் கொல்லப்பட்டார். சிக்கல் பக்கிரி சாமி, பூவாலூர் ராசையன், திருமெய் ஞானத்தில் அஞ்சானும் நாகூரானும், 2011 ஜனவரி 19ல் ஜெ.நாவலனும் என்று தொடரும் தியாக வரலாறுகளையும் கொண்ட கிழக்குத் தஞ்சை மாவட்டத் தில் தான் இன்றைய நாகை மாவட்டம் உள்ளது. கூலி உயர்வுக்கான போராட்டம் – சாதியக் கொடுமையை எதிர்த்த போராட் டத்தில் பி.எஸ்.தனுஷ்கோடியும், கோ. பாரதிமோகனும் 12 ஆண்டுகள் சிறை வாழ்க்கையை ஏற்று கம்யூனிஸ்ட் கட்சி யை வளர்த்தார்கள். இன்றும் உயிரோடு நம்மோடு வாழ்கிற ஒப்பற்ற தலைவர் கோ.வீரய்யன், 1976களில் இந்திராகாந்தி அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை அமல்படுத்தியபோது, மன்னார்குடியில் பாசிச எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார். பல மாதம் தலைமறைவாகப் பல வேடங்களில் மறைந்து சென்று தீர முடன் பணியாற்றினார். இன்றும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பணிகளில் தொய்வின்றி பணியாற்றி வருகிறார். பல போராட்டக் களம் கண்ட தலை வர்கள் கே.ஆர்.ஞானசம்பந்தம், எம். செல்லமுத்து, என். கோவிந்தராஜ், என். மணியன், எம்.வேதையன், ஏ.நடராஜன், வி.கே.முத்துசாமி, வி.மீனாட்சிசுந்தரம், தியாகி என். வெங்கிடாசலம் போன்றவர் களின் வீரவரலாறு நிறைந்த பூமி இது. வெண்மணி தியாகிகள் வீரமரணம் அடைந்தபோது, மார்க்சிஸ்ட் கட்சியின் அடாவடித்தனத்தால்தான் இச்சம்பவம் நடந்தது என்று கூறியவர்கள் கூட உண்டு. வெண்மணி தியாகிகள் நினை விடம் போராட்டப் பூமியின் மணி மகுட மாக திகழ்கிறது. எண்ணற்ற மக்களது போராட்டங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமை ஏற்று நடத்தி வருகிறது. இந்தக் காலத்தில் கட்சியின் 20வது மாநில மாநாடு நாகையில் நடை பெறுகிறது. தமிழக அரசியலில் மாற்றத் தை ஏற்படுத்தி, தாழ்ந்து கிடக்கும் உழைப்பாளி மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை இந்த மாநாடு ஏற் படுத்தும் என்பதில் ஐயமில்லை. பல் வேறு சிந்தனைகளால் சிதறிக் கிடக்கும் உழைப்பாளி மக்களை, விவசாயிகளை, தொழிலாளர்களை, இளைஞர்களை, தாழ்த்தப்பட்ட மக்களை ஒன்றுபடுத்தும் பணிகளை மேலும் வலுவுடன் செய்ய இந்த மாநாட்டில் செங்கொடி ஏந்தி சங்க மிப்போம். செங்கொடிகளால் – கோடிக்கரங் களால் – கோரிக்கை முழக்கங்களால் அதிரச் செய்வோம்! வங்கக்கடலோரத் தைச் செம்மயமாக்கு வோம்! கட்டுரையாளர், நாகை மாவட்டச் செயலாளர், சிபிஎம்.

Leave A Reply

%d bloggers like this: