உயர்த்தி பிடித்த செங்கொடியை ஒரு போதும் துவள விடமாட்டோம் சிபிஎம் மேற்குவங்க மாநில 23வது மாநாட்டை துவக்கி வைத்து பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் உரையாற்றினார். கொல்கத்தா, பிப். 15- எத்தனை எத்தனை இடர்கள் வந் தாலும், ஆளும் வர்க்கங்களின் தாக்கு தல்கள் நிகழ்ந்தாலும் உயர்த்திப்பிடித்த செங்கொடியை ஒருபோதும் துவள விடோம் என்ற முழக்கத்தோடு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க மாநில மாநாடு துவங்கியது. கடந்த மாநாட்டிற்கும் இந்த மாநாட்டிற்கும் இடையில் மார்க் சிஸ்ட் கட்சியின் உதிரச் செங்கொடி யைக் காக்க 577 தோழர்கள் உயிர்நீத் துள்ளனர். அவர்களது நினைவை நெஞ்சில் ஏந்தி, உணர்ச்சிமிகு முழக்க மிட்டு, அவர்கள் உயர்த்திப்பிடித்த மார்க்சியத் தத்துவத்தை தீரத்துடன் முன்னெடுத்துச் செல்வோம் என்ற உறுதியுடன் செங்கொடி உயர்ந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மேற்குவங்க மாநில 23வது மாநாடு கொல்கத்தாவில் பிப்ரவரி 15 புதனன்று பேரெழுச்சியுடன் துவங்கியது. மாநாட் டின் துவக்க நிகழ்ச்சியாக கட்சியின் செங்கொடியை பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் ஏற்றி வைத்தார். இதைத் தொடர்ந்து தியாகிகள் ஸ்தூபிக்கு பிரகாஷ் காரத், மாநிலச் செயலாளர் பிமன்பாசு, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் சீத்தாராம் யெச்சூரி, கே.வரதராசன், புத்ததேவ் பட்டாச் சார்யா, பிருந்தா காரத், முகமது அமீன் மற்றும் நிருபம்சென் ஆகியோர் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர். இதைத்தொடர்ந்து மாநாட்டுப் பிரதிநிதிகள் வீர வணக்கம் எனும் உணர்ச்சிமிகு முழக்கத்துடன் மலரஞ்சலி செலுத்தினர். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களுமான மறைந்த தோழர் ஜோதிபாசு பெயரில் அமைந்த நகர் மற்றும் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் பெயரில் அமைந்த அரங்கில் இம்மாநாடு துவங்கியது. மாநாட்டிற்கு பினாய் கோனார், போனானி பிஸ்வாஸ், முகமது சலீம், ரூப்சந்த் முர்மு மற்றும் தினேஷ் தாகுவா ஆகியோர் கொண்ட தலை மைக்குழு தலைமையேற்றது. மறைந்த தலைவர்கள் ஜோதிபாசு, சுர்ஜித், டாக்டர் எம்.கே.பாந்தே, சுபாஷ் சக்ர வர்த்தி ஆகியோருக்கு மாநாடு அஞ்சலி செலுத்தியது. ஆளும் வர்க்கத்தினரால் படுகொலை செய்யப்பட்ட அனைத் துத் தோழர்களுக்கும் உணர்ச்சிப் பெருக் குடன் மாநாடு அஞ்சலி செலுத்தியது. பிரகாஷ் காரத் இதைத்தொடர்ந்து மாநாட்டை துவக்கி வைத்து பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் உரையாற்றினார். தேர்தல் தோல்விகள், ஆட்சி அதிகாரத் திலிருந்து இடதுசாரிகளை பலவீனப் படுத்தியிருக்கலாம்; ஆனால் இந்த நிலைமையை தீரத்துடன் எதிர் கொண்டு மேற்குவங்கத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியுடன் முன்னேறும் என அவர் சூளுரைத்தார். மாநிலம் முழுவதிலும் கிராமப்புற ஏழைகளுக்காகவும், முறைசாரா தொழிலாளர்களுக்காகவும், அரசின் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்துதரப்பு மக்களின் கோரிக்கை களுக்காகவும் இடைவிடாத போராட் டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்னும் வேகமாக எடுத்துச் செல்லும் என்றும் அவர் முழக்கமிட்டார். மாநாட்டில் கட்சியின் மாநிலக்குழு அரசியல் – ஸ்தாபன அறிக்கையை மாநிலச்செயலாளர் பிமன்பாசு சமர்ப் பித்தார். இதைத்தொடர்ந்து பிரதிநி திகள் விவாதம் துவங்கியது. 5 நாட்கள் நடைபெறும் இம்மா நாடு பிப்ரவரி 19ம் தேதி வரலாறு காணாத மிகப்பிரம்மாண்டமான பேரணியுடன் நிறைவு பெறுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.