உடுமலை பள்ளியில் மாணவர் தற்கொலை உடுமலை, பிப். 15 – உடுமலைப்பேட்டை ஆர்.கே.ஆர். மெட்ரிகுலே ஷன் பள்ளியில் படித்து வந்த 11ம் வகுப்பு மாணவர் அனுஜ் பள்ளி விடுதியில் தூக்குப் போட்டுத் தற் கொலை செய்து கொண்டார். வகுப்பு பொருளாதாரப் பாடப்பிரிவு ஆசிரியர் மகேஸ்வரன் கடுமையாகத் தாக்கி அவமானப்படுத்திய தால் தான் இந்த முடிவுக்கு வந்ததாக அனுஜ் கடிதம் எழுதி வைத்து விட்டு, இந்த பரிதாபமான முடிவை மேற் கொண்டார். முன்னதாக கடந்த ஜன வரி 19ம் தேதி இதே ஆர். கே.ஆர். பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வந்த பத்தாம் வகுப்பு மாணவர் கிருஷ்ண குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார் என்பது குறிப் பிடத்தக்கது. ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டையைச் சேர்ந்த அன்பழகன் என்ப வரது மகன் அனுஜ். இவர் பள்ளி விடுதியில் உள்ள தனி அறையில் மின்விசிறி யில் தூக்கிட்ட நிலையில் புதன்கிழமை பிணமாகத் தொங்கினார். தகவல் அறிந்து காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டனர். ஏற்கனவே இப்பள்ளி யில் கிருஷ்ண குமார் என்ற மாணவர் மர்மமான முறை யில் உயிரிழந்தது குறித்து நிர்வாகத்தின் மீது சந்தேகம் நிலவுகிறது. இந்த நிலையில் அனு ஜின் சடலத்தை போலீசார் அவசர அவசரமாக அங்கி ருந்து மீட்டு, ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். இந் நிலையில் மாணவர் மர ணம் குறித்து தகவல் அறிந்து மாணவர்களும், பெற்றோர் களும் திரண்டிருந்தனர்.

Leave A Reply