ஈரோட்டில் அரசு கேபிள் ஆப்பரேட்டர்களுக்கு மிரட்டல் – ஈரோடு,பிப். 15- அரசு கேபிள் டி.வி ஆப்பரேட்டர்களை மிரட் டல் விடுத்து வரும் நபர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனக் கோரி மனு அளிக்கப் பட்டுள்ளது. இது குறித்து ஆட்சியரிடம் அளிக் கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது : ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 15 ஆண் டுகளுக்கும் மேலாக சுமார் 19 கேபிள் ஆப்பரேட் டர் கள் செயல்பட்டு வருகிறோம். தற்போது அரசு கேபிளில் இணைந்து தங்களது கேபிள் தொழி லைத் தொடர்ந்து வருகிறோம். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கவுந்தப் பாடி புதூரைச் சேர்ந்த குப்பண்ணன் என்பவரின் மகன் சீனி (எ) சீனிவாசன் கடந்த ஒரு மாத கால மாக கவுந்தப்பாடி சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள அரசின் மெயின் கேபிள் ஒயரைத் துண்டித் தும் ஏற்கனவே இத்தொழிலில் ஈடுபட்டு வரும் எங்களை மிரட்டியும் இடையூறு ஏற்படுத்தியும் வருகிறார். மேலும் தன்னை கவுந்தப்பாடி பகுதிக்கு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் பொறுப்பாளராக நிய மனம் செய்யப்பட்டுள்ளதாகவும், எந்த இடத்தி லும் இணைப்பு வழங்க தனக்கு அதிகாரம் இருப்ப தாகவும், தன்னை அனுசரித்து செல்லவில்லை என் றால் பொய் வழக்கு பதிவு செய்து, உரிமத்தைப் பறித்து தொழிலையே முடக்கி விடுவேன் என்றும் மிரட்டி வருகிறார். எனவே கவுந்தப்பாடி கேபிள் டிவி ஆப்பரேட்டர்களை மிரட்டி வரும் கவுந்தப் பாடி புதூரைச் சேர்ந்த குப்பண்ணன் என்பவரின் மகன் சீனி (எ) சீனிவாசன் மீது தகுந்த நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனக் கோரி கவுந்தப்பாடி பகுதி கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் தனி வட்டாட்சியரி டம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: