ஆர்டிஐ ஆர்வலருக்கு சிஎன்என்-ஐபிஎன் விருது இட்டா நகர், பிப்.15- அருணாச்சல் பிரதே சத்தைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமை ஆர்வலர் பாயி கியாடி என்பவருக்கு சிஎன்என் -ஐபிஎன் பத்திரி கையாளர் விருது வழங்கப் பட்டுள்ளது. ஊழலுக்கு எதிரான மக்கள் பிரிவின் கீழ் கியாடிக்கு விருது கிடைத்துள்ளது. 2012ம் ஆண்டில் 15 மக்கள் பத் திரிகையாளர்களுக்கு சிஎன்என் – ஐபிஎன் விருது வழங்கப்பட்டுள்ளது. சங்கோ லாம்டே அறக் கட்டளை என்ற அரசு சாரா அமைப்பின் தலைவ ரும் ஆவார் கியாடி. விருதி னைப் பெற்றுக் கொண்டு உரையாற்றிய கியாடி, இளைய தலைமுறைக்கு முன்னோடியாக இருக்க தான் விரும்பியதாகவும், அதற்குரிய மேடையை மக்கள் பத்திரிகையாளர் நிகழ்வு அளித்ததாகவும் கூறினார். அதிகார வர்க்கத் தின் ஊழலை வெளிச்சத் துக்குக் கொண்டு வர அந்த மேடை உதவியது என்றும் அவர் சொன் னார். பழம்பொருள் கடத்தியதாக மூவர் கைது காங்டாக், பிப்.15- புத்த துறவிகள் என்று கூறிக் கொண்ட மூன்று பேரை காவல்துறை கைது செய்தது. சிக்கிமில் இருந்து தொல் பொருட்களை கடத்தியவர்கள் என்ற சந் தேகத்தின் பேரில் மூவரும் கைது செய்யப்பட்டுள் ளனர். தெற்கு சிக்கிமில் உள்ள மடாலயத்தைச் சேர்ந்தவர் கள் என்று நிரூபிக்க மூவ ரும் அடையாள அட்டை களைக் காண்பித்தவுடன், சோதனைச் சாவடியில் இருந்த காவல் துறையின ருக்கு இம்மூவர் மீதும் சந்தேகம் உருவானது. அவர்களுடைய உடை மைகளை காவல்துறை சோதனையிட்டது. அவர் களிடம் தொல் பொருட் கள் எனக் கருதப்படும் பொருட்கள் இருந்தன என்று காவல்துறை கூறி யது. பீகாரில் உள்ள புத்த கயாவுக்குச் செல்வதாக மூன்று பேரும் காவல் துறையிடம் கூறினர். காஷ்மீர் நெடுஞ்சாலை 3வது நாளாக மூடல் ஸ்ரீநகர், பிப்.15- காஷ்மீர் பள்ளத்தாக்கு நாட்டின் பிறபகுதிகளில் இருந்து மூன்றாவது நாளாக துண்டிக்கப்பட் டுள்ளது. ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் கடும்பனி பெய்துள்ளது. பல இடங்களில் பனிச் சரிவு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் மண் சரிவும் நடந்துள்ளது. முக்கிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால் சாலை யின் பல பகுதிகளில் 1500க் கும் மேற்பட்ட வாகனங் கள் சிக்கித் தவிக்கின்றன. ராம்பன் பகுதியில் இரண்டு மண் சரிவுகளும் ஒரு பனிச்சரிவும் நடந்துள் ளன என்று ராம்பன் காவல்துறை கண்காணிப் பாளர் அனில் மகோத்ரா தெரிவித்தார். சாலையை மூடியிருந்த பனி அகற்றப்பட்ட பின், கடும் மழை காரணமாக ராம்பன் மாவட்டத்தின் பந்தல், ஷேர் பீபி பகுதி களில் இரண்டு மண்சரி வுகள் ஏற்பட்டன. நச் லேனா பகுதியில் பனிச்சரி வும் ஏற் பட்டது. மண்சரி வால் பாதையை மறைத்த பாறையை உடைக்க நான்கு வெடிப்புகளை எல் லைச் சாலை அமைப்பு நடத்தியது. நெடுஞ்சாலை யை மூடிக்கிடக்கும் மண், பாறை, பனி ஆகியவற்றை அகற்றும்பணியில் எல் லைச்சாலை அமைப்பு தீவிரமாக ஈடுபட்டு வரு கிறது. மாவட்டங்களுக்கு இடையேயான நெடுஞ் சாலையும் பனிப்பொழி வால் மூடப்பட்டுள்ள தால் நகரங்களும் கிராமங் களும் தனித்தனித் தீவு களாக உள்ளன.

Leave a Reply

You must be logged in to post a comment.