ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் காவல்துறை அணுகுமுறையில் மாற்றம் இல்லை ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு மதுரை, பிப். 15 – தமிழகத்தில் ஆட்சிமாற் றம் ஏற்பட்டும் காவல்துறை அணுகுமுறையில் பெரிய மாற்றம் வரவில்லை என்று மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் மாநிலச்செயலா ளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். மதுரையில் செவ்வா யன்று அவர் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது:- பரமக்குடியில் காவல் துறை துப்பாக்கிச்சூடு, விழுப்புரம் மாவட்டத்தில் காவல்நிலையத்தில் இருளர் சமுதாயப் பெண்கள் பாலி யல் பலாத்காரம் செய்யப் பட்டது, தூத்துக்குடி மாவட் டத்தில் நில ஆக்கிரமிப்பு செய்தவர்களைக் கண்டித்த மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் கனகராஜ் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப் பட்டும் இதுவரை குற்றவா ளிகள் கைது செய்யப்படா தது என பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. தமிழகத்தில் அன்றாடம் நடைபெறும் கொலை, கொள்ளை, வழிப்பறிச் சம் பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காவல் நிலைய மரணங்கள் அதிக ரித்து வருகிறது. தமிழகத் தில் ஆட்சி மாற்றப்பட்டும் காவல்துறை அணுகுமுறை யில் பெரிய மாற்றம் இன் னும் ஏற்படவில்லை. ஆகவே, தமிழக அரசு உரிய தலை யீடு செய்ய வேண்டும் என மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. கல்விக்கட்டணச்சட்டம் பள்ளிகள் இறுதித் தேர்வை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கின்றன. ஆகவே, கல்வியாண்டு துவக் கத்தில் அரசு நிர்ணயித்த கல்விக்கட்டணத்தை தனி யார் கல்வி நிலையங்கள் அமல்படுத்துவதற்கான நட வடிக்கையை அரசு மேற் கொள்ள வேண்டும். அத்து டன் தனியார் பொறியியல், மருத்துவக்கல்லூரிகளில் அரசு நிர்ணயம் செய்த கட் டணத்தை வசூல் செய் வதை உத்தரவாதப்படுத்த வேண்டும். கல்விக்கட்டணச் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என அரசு கூறி யுள்ளது. தனியார் பள்ளிக ளில் 25 சதவீத இடம் ஏழை களுக்கு வழங்கிட வேண்டு மென கல்வி உரிமைச் சட்டம் பணிக்கிறது. இந்த சட்டத்தை அமல்படுத்த அரசு என்ன அளவுகோலைப் பயன் படுத்துகிறது என்பதை வெளிப்படையாக அறி விக்க வேண்டும். சென்னையில் பள்ளி மாணவனால் ஆசிரியை படுகொலை செய்யப்பட் டுள்ளது பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பச்சூழல், கல்விச் சூழல், சமூகச்சூழல்தான் ஒரு மனிதனை உருவாக்கும். இவை மோசமானதன் கார ணமே, ஆசிரியை படு கொலை நிகழ்ந்துள்ளது. இதேபோல சென்னையில் ஒரு கல்லூரி மாணவி பாலி யல் பலாத்காரம் செய்யப் பட்டுள்ளார். சீரழியும் பண் பாட்டுத்தளத்தை சரிசெய்ய கலாச்சாரரீதியான நடவ டிக்கையில் ஈடுபடும் அமைப் புகளுடன் அரசு கலந்தா லோசித்து ஆக்கபூர்வ நட வடிக்கையை எடுக்க வேண் டும். பாளையங்கோட்டை சித்த மருத்துவ மாணவர்க ளின் கோரிக்கைகள் மீது தமிழக அரசு ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண் டும். வேலைநிறுத்தம் இந்தியாவில் மத்திய அரசு அமலாக்கி வரும் தாராளமயப் பொருளா தாரக்கொள்கையால் சக லப்பகுதியினரும் பாதிப்புக் குள்ளாகியுள்ளனர். மேலும் உழைக்கும் மக்களை காக்க வும், தொழிற்சங்க சட்டங் களைப் பாதுகாக்கவும், தொழிலாளர் நலனைக் காக்கவும் வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் சிஐடியு, ஏஐடியுசி, பிஎம்எ°, ஐஎன் டியுசி உள்ளிட்ட பல்வேறு மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் அகில இந்திய வேலைநிறுத்தம் பிப்ரவரி 28 ம் தேதி நடைபெறுகிறது. இப்போராட்டத்தை மார்க் சி°ட் கம்யூனி°ட் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. நாகையில் மாநில மாநாடு நாகையில் வருகிற பிப் ரவரி 22 ம் தேதி முதல் பிப்ரவரி 25 ம் தேதி வரை மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் 20 வது மாநில மாநாடு நடைபெறுகிறது. கட்சியின் பொதுச்செய லாளர் பிரகாஷ் காரத், அரசி யல் தலைமைக்குழு உறுப் பினர்கள் எ°.ராமச்சந்தி ரன் பிள்ளை, கே.வரத ராசன், பிருந்தாகாரத் ஆகி யோர் கலந்து கொள்கின்ற னர். இம்மாநாட்டில் ஏற்றப் படுவதற்காக மதுரையில் இருந்து பிப்ரவரி 18 ம் தேதி மாலை வில்லாபுரம் வீராங் கனை லீலாவதி ஜோதி எடுத்துச்செல்லப்படுகிறது. மாநாட்டின் நிறைவாக பிப்ரவரி 25 ம் தேதி மாபெரும் பேரணி நடைபெறுகிறது. இதையொட்டி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சி யின் அகில இந்திய, மாநிலத் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றுகின்றனர். சங்கரன் கோவில் இடைத் தேர்தல் தேதி இன்னும் அறி விக்கப்படவில்லை. இத் தேர்தல் குறித்து கட்சியின் மாநில செயற்குழு விவாதித்து முடிவு எடுக்கும் என்று ஜி. ராமகிருஷ்ணன் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.