கோவை: தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில மாநாடு ஏ.பி.ஜே அப்துல்கலாம் பங்கேற்கிறார் கோவை, பிப். 15- தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் 16-வது மாநில மாநாடு மற்றும் சங்கத்தின் பொதுச்செய லாளர் செ. முத்துசாமியின் பவள விழாவும் கோவையில் இம்மாதம் 19ந்தேதி நடைபெறுகிறது. இது குறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் செய் தியாளர்களிடம் செவ்வாயன்று தெரிவித்ததாவது: தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் 16-வது மாநில மாநாடு கோவை அவினாசி சாலையில் உள்ள கொடீசியா தொழிற்காட்சி அரங்கில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச் சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல்கலாம், சந்திராயன் திட்ட இயக்குநர் விஞ் ஞானி மயில்சாமி அண்ணாதுரை, தமிழக கல்வி அமைச்சர் ஆர். சிவபதி, வேளாண்மை அமைச்சர் செ.தாமோதிரன், மேயர் செ.ம.வேலுச்சாமி, கோவை மாவட்ட ஆட்சியர் எம். கருணாகரன் மற் றும் கல்வியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இம்மாநாட்டில் ‘தமிழ்நாட்டு ஆசிரியர் இயக்க வரலாறு’ என்ற நூலும் பொதுச் செயலாள ரின் பவளவிழா மலரும் வெளியிடப்படுகிறது. இம்மாநாட்டில் ஏராளமான ஆசிரியர்கள் பங் கேற்க உள்ளனர் என தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: