அரசுக்கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்பு புறக்கணிப்பு கடலூர், பிப். 15- அரசு கலைக்கல்லூரிகளில் உள்ள காலிப்பணி யிடங்களை நிரப்பிடக்கோரி (பிப்.16) வியாழனன்று மாநிலம் முழுவதும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் என்று இந்திய மாணவர்சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து இச்சங்கத்தின் மாநில செயலாளர் ஜோ. ராஜ்மோகன் கடலூரில் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:- தமிழ்நாட்டில் உள்ள 62 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 24 பல்கலைக்கழக உறுப்பு கல் லூரிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்கள் மிகவும் ஏழ்மை குடும்பங்களை சார்ந்தவர்கள். இக்கல் லூரிகளில் குடிநீர், கழிவறை, வகுப்பறை, ஆய்வகங்கள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கூட நிறைவேற்றப் படாமல் உள்ளன. இக்கல்லூரிகளில் 1025 விரிவுரையாளர்கள் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டு 5 மாதங்கள் கடந்தும் நிரப்பப்படவில்லை. மேலும் 1661 கவுரவ விரி வுரையாளர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. 37 நூலகர் பணியிடங்கள், 45 உடற்கல்வி இயக்குநர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இது தவிர மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப 500 புதிய விரிவுரை யாளர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பிட வேண்டும். இப்பணியிடங்களை நிரப்பாமல் அரசு மெத்தனம் காட்டுகிறது. மேலும் அரசு கல்லூரி இல்லாத மாவட்டமான ஈரோடு, விருதுநகர், தேனி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் புதிய கல்லூரிகளை திறக்க வேண்டும். கல்லூரியில் பேரவை தேர்தலை நடத்த வேண்டும் என் பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் கல்லூரிகளில் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தானே புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் இன்று வரைக் கும் செய்து கொடுக்கப்படவில்லை. புயலால் பாதிக்கப் பட்ட மாணவர்களிடமே புயல் நிவாரண நிதி வசூல் செய்வது மோசமான நடவடிக்கையாகும். எனவே வசூ லிக்கப்பட்ட பணத்தை மாணவர்களிடமே திரும்ப கொடுக்க வேண்டும். இல்லை என்றால் மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: