அமெரிக்கா இறந்தவர்கள் வாக்காளர்களாக நீடிக்கிறார்கள்! வாஷிங்டன், பிப்.15 – அமெரிக்காவின் வாக்காளர்கள் பட்டியலில் இறந்து போனவர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள் என்ற தகவல் ஆய்வு மூலம் அம்பலமாகியுள்ளது. நடப்பாண்டில் அமெரிக்க அதிபருக் கான தேர்தல் நடக்கப்போகிறது. இதற் கான தயாரிப்பில் இரண்டு பெரிய கட்சி களும் மும்முரமாக இறங்கியுள்ளன. ஜன நாயகக் கட்சி சார்பில் தற்போதைய அதி பர் பாரக் ஒபாமா களமிறங்குகிறார். அவரை எதிர்கொள்ள குடியரசுக்கட்சி சார்பில் யார் போட்டியிடுவது என்பதற்கான தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. தேர்தலுக்காக வாக்காளர்களும் பதிவும் செய்து வரு கிறார்கள். இந்த வாக்காளர்கள் பதிவு பற்றி ப்யூ ஆய்வு மையம் செய்த ஆய்வில் ஏராள மான தில்லுமுல்லு நடந்திருப்பது தெரிய வந்தது. மரணமடைந்துவிட்ட 18 லட்சம் அமெரிக்க குடிமக்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதற்கு வாக் காளர் பதிவில் மோசமான நடைமுறை இருப்பதுதான் காரணம் என்று ஆய்வறிக் கை கூறுகிறது. வாக்காளரின் நம்பிக்கை குலைவதோடு, நியாயமான தேர்தல் என் பதைக் கேள்விக்குறியாக்கும் வகையில் தான் இந்தப் பணிகள் இருக்கின்றன என்றும் அது சுட்டிக்காட்டுகிறது. வாக்காளர் பதிவு மற்றும் பட்டியல் பராமரிப்பு போன்றவை வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைக் கொண்டு தயாரிக் கப்படுவதில்லை. வெறும் காகிதங்களைப் பயன்படுத்தி செய்து வரும் பணிகளால், தவறுகள், தாமதம் ஆகியவற்றைத் தாண்டி, மற்ற நாடுகளை விட அதிகமான செலவும் ஆகிறது. ஓரேகான் பல்கலைக் கழகத்துடன் இணைந்து ப்யூ மையம் மேற்கொண்ட மற்றொரு ஆய்வில், வாக்கா ளர் பட்டியலை பராமரிக்க கனடாவில் ஆகும் செலவை விட பல மடங்கு அதிக செல வாகிறது என்று தெரிய வந்திருக்கிறது. எட்டு வாக்காளர்களுக்கான பதிவு நடந்தால் அதில் ஒன்று செல்லாததாகவே உள்ளது என்று ப்யூ மையம் கூறியிருக்கி றது. ஜனநாயகம் பற்றி உலகிற்கு அறிவு ரை சொல்லும் அமெரிக்காவில் தேர்தல் நடைமுறைகள் நாறிப் போய்க்கிடக்கிறது. இத்தனைக்கும் நான்காண்டுகளுக்கு ஒருமுறை வரும் அதிபர் தேர்தலும் நடப் பாண்டில் நடக்கப்போகிறது.

Leave A Reply

%d bloggers like this: