அதிகரிக்கின்றன வீடில்லாதோருக்கான முகாம்கள் அவரது பெயர் கெய்த் அல்லன். அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் இருக்கிறார். வீடில்லாதவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள மத்திய சேவைத் துறையின் முகாமில் இரவு நேரத்தில் உணவு தயாரிக்கும் பணியை அவர் மேற் கொள்கிறார். அவர் அந்த முகாமிற்கு வந்த சேர்ந்ததற்குக் காரணமே, இருந்த வீட்டை இழந்து தெருவுக்கு வந்ததுதான். இந்த முகாமில் இருக்கும் அனை வருக்கும் உணவு மற்றும் படுக்கை என்பதை உத்தரவாதப்படுத்தும் முயற்சி யில் நிர்வாகத்தினர் இருக்கிறார்கள். வீடில்லாதவர்களுக்கு அமெரிக்காவின் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் இதுவும் ஒன்றாகும். ஒவ்வொரு நாள் இரவும் கிட்டத்தட்ட இருபது லட்சம் அமெரிக்கர்கள் இருக்க இடமின்றித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கென்று சொந்தமான குடியி ருப்பு எதுவும் இல்லை. இவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த அதிகரிப்பு கெய்த் அல்லன் போன்றவர்களுக்கு எந்தவித ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை. வேலையிழப்புகள் அதிகரித்து வருவதால்தான் இந்த எண் ணிக்கை உயர்கிறது. வேலையில்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் நீட்டிக்கப்பட்டன. அந்த நீட்டிப்புக்காலம் பல அமெரிக்க மாகாணங்களில் முடி வுக்கு வருகிறது. அமெரிக்காவின் மத்திய அரசு இந்த சலுகைகளை நீட்டிக்கா விட்டால், சுமார் 30 மாகாணங்களில் உள்ளவர்கள் இந்த சலுகைகளை வரு கின்ற ஆறு மாதங்களுக்குள் இழக்கப் போகிறார்கள். அதாவது, வேலையிழந் துள்ள அமெரிக்கர்களில் லட்சக்கணக்கானோர் எந்தவித வருமானமின்றி இன் னும் சில மாதங்களில் நிர்க்கதியாக நிற்கவிருக்கிறார் கள். 30 லட்சம் பேர் வேலையில்லா நிவாரணத்தைப் பெற்றுக் கொண்டு சமாளித்தனர். சலுகை நீட்டிப்பு கிடைத்ததால் ஐந்து லட்சம் பேர் பலனடைந்த னர். இந்த நெருக்கடிகளை மறைக்கும் வகையில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஒரு வேலையைச் செய்தார். நெருக்கடியிலிருந்து மீண்டு விட்டோம், ேலைவாய்ப்புகள் உருவாகிவிட்டன என்று அறிவித் தார். அமெரிக்கா சரிவில் உள்ளது அல்லது அதன் செல்வாக்குக் குறைந்து விட்டது என்று யாராவது குறிப்பிட்டால், அவர் தான் என்ன பேசுகிறேன் என் பதே தெரியாமல் பேசிக் கொண்டிருப்பதாகவே அர்த்தம் என்று கிண்டலா கப் பேசினார். ஆனால், இந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவின் வளர்ச்சியை சீனாவின் வளர்ச்சியோடு ஒப்பிட்டு பொருளாதார வல்லுநர்கள் பேசுகிறார் கள். அமெரிக்காவின் நெருக்கடிக்கான காரணத்தையும் அரசோ அல்லது நிர்வாகமோ இதுவரை மக்களுக்குச் சொல்லவில்லை. அப்படிச் சொன்னால், அதற்குக் காரணமும் அவர்கள்தான் என்பது அம்பல மாகிவிடுமோ என்ற அச்சம் அவர்களிடம் உள்ளது. அந்த°து இழப்பு2000 ஆம் ஆண்டில் அமெரிக்கப் பொருளாதாரத்தில் எட்டில் ஒரு பங்குதான் சீனாவின் பொருளாதாரம் இருந்தது. பத்தாண் டுகள் கழித்து அமெரிக்கப் பொருளாதாரத்தில் 41 விழுக்காடு அளவுக்கு சீனாவின் பொருளாதாரம் உள்ளது. இதுவும் தற்போதுள்ள நாணயப் பரிமாற்ற முறையில் அமைந்துள்ளதாகும். மற்றொரு பத்தாண்டுகள் இப்படியே கழிந்தால் பொருளாதார அளவில் முதலிடம் என்ற அந்த°தை சீனாவிடம் அமெரிக்கா இழக்க நேரிடலாம். 1969 ஆம் ஆண்டில் உலக மொத்த வருமானத்தில் அமெரிக்காவின் பங்கு 36 விழுக்காடாக இருந்தது. 2000ல் 31 விழுக்காடாகவும், 2010ல் 23.1 விழுக்கா டாகவும் சரிந்துள்ளது. பொருளாதாரச் சரிவு அமெரிக்க மக்களின் வாழ்க்கை யில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதைத்தான் தெருக்களில் வீடின்றிஉலாவும் மக்கள் மற்றும் பிச்சையெடுப்பவர்கள் எண் ணிக்கை அதிகரிப்பு ஆகியவை காட்டுகின்றன. உலக அளவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏற்பட்டிருந்த வளர்ச்சி அப ரிமிதமாக இருந்தாலும், வளர்ச்சிக்கேற்ற வகையில் வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை. வேலையில்லா வளர்ச்சி என்றார்கள், இந்நிலையில் நெருக்க டியைச் சமாளிக்க அரசும், பகாசுர நிறுவனங்களும் கைவைப்பதே ஊழியர்க ளின் வேலையில்தான்என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஊழியர்கள்தான் வீடு களை இழந்து தவிக்கிறார்கள். பலர் தங்களது குடும் பங்களையே இழந்துவிட்டனர். வீடில்லாதோருக்கு, வேலையில்லாதோருக்கு ஏற் படுத்தப்பட்டுள்ள முகாம்களை இவர்கள்தான் நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். கெய்த் அல்லன் போன்றவர்களுக்கு இந்த முகாம்களே சொந்த வீடுகளைப் போல ஆகிக் கொண்டிருக்கின்றன. பொருளாதார நெரு க்கடி போகிற போக்கைப் பார்த்தால், நமக்கு நிரந்தர மாகமுகாமில்வேலைஇருக் கும்போலிருக்கிறது என்று இவர்கள் கிண்டலடித்துக் கொண்டிருக்கிறார்கள். —– வேலையிழப்பால் சொந்தமான மற்றும் வாடகை வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களில் சிலர் வீதிகளில், ரயில் நிலையங்களில் மற்றும் இன்டர்நெட் மையங்களில் தங்களின் இரவு நேரத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறார் கள். ஐந்து பேர் தூங்கக்கூடிய இடத்தில் பத்து பேர் இருந்தால், மாறி, மாறித் தூங்குகிறார்கள். அலுவலகங்களில் இரவுநேரப் பணிக்கு சரி என்று தலையாட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இருக்கும் வேலை பறிபோய்விட்டால் அதற்கும் உத்தரவாதமில்லை என்பதையும் அறிந்தே வைத்திருக்கிறார்கள். நெருக்கடியிலிருந்து மீண்டு விட்டோம் என்று ஒபாமா அறிவித்தாலும், அது அவருடைய ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரத் துவக்கம் என்று மக்கள் கிண்டல் அடிக்கிறார்கள். நெருக்கடி தீர்வதற்கான வாய்ப்பு எதுவும் இப்போதைக்கு இல்லை என்ற நிலைமை வேலையிழந்தவர்கள் மற்றும் வேலையிழக்கும் அபாயத்தில் உள்ளவர்கள் ஆகியோரின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.