கூடங்குளம் : அணு உலையை இயக்காமல் பார்த்துக்கொண்டே இருக்க முடியாது! ரஷ்யத்தூதர் அலெக்சாண்டர் பேட்டி சென்னை, பிப். 15- “இயற்கைச் சீற்றங்கள் குறித்து மக்களுக்கு அச்சம் எழுவது இயல்பு; அந்த அச் சத்தை பயன்படுத்தி பெரும் குழப்பத்தை அவர்களது மனங்களில் விதைப்பது என்பது சரியல்ல. மக்கள் குழப்பத்தில் ஆழ்த்தப்பட் டுள்ளனர். அவர்களது குழப் பத்தை முதலில் தெளிவு படுத்த வேண்டியது அவசி யம். இயற்கைச் சீற்றங்கள் குறித்து ஒவ்வொருவரும் அச்சப்படவே செய்வார் கள். ஆனால் அதே நேரத் தில் உலகிலேயே மிகவும் பாதுகாப்பான அணுமின் நிலையம் கூடங்குளத்தில் அமைந்திருக்கிறது என்ற உண்மையை அவர்களுக்கு புரியவைக்க வேண்டியுள் ளது. இது மிகவும் பாது காப்பானது என்பதை எவ ராலும் மறுக்க முடியாது. இன்றைக்கு உலகில் செயல் பட்டுக் கொண்டிருக்கும் பல்வேறு அணுமின் நிலை யங்களில், மிகவும் பாது காப்பான அணுமின் நிலை யப்பகுதியில் இருக்கும் மக் கள் எந்த அச்சமும் கொள் ளத் தேவையில் லை”. இந்தியாவுக்கான ரஷ்யத் தூதர் அலெக்சாண்டர் எம்.கடாக்கின் மேற்கண்ட வாறு கூறியுள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத் திற்கு பிப்ரவரி 15 புதனன்று அளித்த பேட்டியில், கூடங் குளம் அணுமின் நிலை யத்தை எதிர்த்து போராட் டங்கள் நடப்பதும், அதை அரசு எதிர்கொள்வதும் இந் திய நாட்டின் உள் விவகாரம் என்று குறிப்பிட்டார். ஆனால் அதே நேரத்தில், “இந்தப்பிரச்சனையில் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்திய அரசுதான் தீர்மானிக்க வேண்டும். அணுமின் நிலையத்தை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது என் பது விசாரணைக்குரியது. அவர்கள் எங்கிருந்தோ பணம் பெறுகிறார் கள் என்ற சந்தேகங்கள் உள் ளன. மிக நீண்ட காலத்திற்கு பந்தல் போட்டு அமர்ந்து கொண்டு, இத்த கைய போராட்டத்தை நடத்திக் கொண்டே இருப்பதற்கு மிகப் பெருமளவில் பணம் தேவை என்பதை சுட்டிக் காட்டுகிறேன்” என்றும் கடாக்கின் குறிப்பிட்டார். பல்வேறு இயற்கைச்சீற் றங்கள் அளித்த அனுபவங் களையெல்லாம் உள்வாங் கிக்கொண்டு, மிகவும் பாது காப்பான முறையில் வடிவ மைக்கப்பட்டுள்ள கூடங் குளம் அணுமின் நிலை யத்தை இயக்குவதற்கு பணி யாற்ற வேண்டிய தருணம் இது; அதை முடக்கி சீர் குலைப்பதற்கான நடவ டிக்கைகளை தொடர முடி யாது என்றும் அவர் குறிப் பிட்டார். “அணுமின் நிலையத் தில் அமைக்கப்பட்டுள்ள இயந்திரங் கள் உடனடியாக இயக்கப்பட்டாக வேண் டும். ஏற்கெனவே காலம் கடந்துவிட்டது. அதை இயக்காமல், வெறுமனே பேணிப் பாதுகாத்துக் கொண்டிருப்பது அளவில் லாத செலவுபிடிக்கும் செய லாகும். இயந்திரங்கள் எந்த உற்பத்தியும் செய்யாமல் வைக்கப் பட்டிருக்கின் றன; ஆனால் நாம் அதற்குத் தொடர்ந்து பெருமளவில் செலவு செய்துகொண்டி ருக்கிறோம். இந்த நிலை நீடிக்க முடி யாது” என்றும் அலெக்சாண்டர் கடாக் கின் கூறினார். எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் அணு உலை யை இயக்குவதற்கான நடவடிக் கையை மேற்கொள்வது குறித்து இந்திய அரசுடன் தொடர்ந்து பேசி வருவதாக குறிப்பிட்ட அவர், மக்க ளுக்கு தெளிவுபடுத்தி அணு மின் உலையை இயக்குவதா, இல்லையா என்பது முற்றி லும் இந்தியா வின் உள் நாட்டு விவகாரம்; என்ன செய்வது என்பதை இந்திய அரசாங்கமே முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.