18 ஆயிரம் பேருக்கு ஊதியம் தரவில்லை!! தர மறுக்கும் தனியார் விமான நிறுவனங்கள் கிங் ஃபிஷர் மற்றும் ஜெட் ஏர்வே° ஆகியவற்றில் பணியாற்றும் சுமார் 18 ஆயிரம் ஊழியர்களுக்குக் கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் தராமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஊதாரிச் செலவுக்குப் பெயர் பெற்ற விஜய் மல்லையாதான் கிங் ஃபிஷர் நிறுவனத்தின் உரிமையாளர். குதிரைப்பந்தயம், ஐபிஎல் கிரிக்கெட் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தும் இவர், பிரச்சனை என்றவுடன் மத்திய அரசின் மீது சுமையைப் போட முயன்றார். எதிர்ப்பு கிளம்பியதும் மறைமுகமான வேலையில் இறங்கி னார். இருந்தாலும் நெருக்கடி தலைக்கு மேல் போய்விட்ட நிலைமையில், அதை மறுபடியும் நல்ல நிலைக்குக் கொண்டு வர அந்நிய முதலீடு பற்றியெல் லாம் பேசிக் கொண்டிருக்கிறார். தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனங்களின் மோசமான நிர்வாகம் தொடர்ந்து அம்பலமாகிக் கொண்டு வருகிறது. ஜனவரி மாதத் துவக்கத்தில், தனது ஊழியர்களுக்கு ஒரு உறுதிமொழி அளித் தார். டிசம்பர் மாதத்திற்கான ஊதியம் ஜனவரி மாத இறுதியில் வழங்கப்பட்டுவிடும் என்பதுதான் அது. இதைக்கேட்டவுடன் அவரது கிங் ஃபிஷர் நிறுவனத்தைச் சேர்ந்த 180 பைலட்டுகள் நிர்வாகத்திற்கு ஒரு கடிதம் எழு தினர். உறுதிமொழி கொடுத்தபடி டிசம்பர் மாத ஊதியம் தரப்படாவிட்டால் வேலைக்கு வரமாட்டோம் என்று கூறினர். இந்த நிறுவனத்தில் மொத்தம் 700 பைலட்டுகள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில்தான், இரண்டு நாட்களுக்கு முன்பாக அனைத்து ஊழியர்களுக்கும் நிர்வாகத்தரப்பிலிருந்து ஒரு இ-மெயில் அனுப்பப்பட்டிருக்கிறது. டிசம்பர் மாதத்திற்கான ஊதியம் மீண்டும் தாமதப்படும் என்று அதில் குறிப்பிட்டி ருப்பதைப் பார்த்து ஊழியர்கள் அதிர்ந்து போய்விட்டனர். தவறான நிர்வாகத்தால் கிங் பிஷர் நிறுவனத்தின் கடன் 7 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. கடைசியாக நவம்பர் மாதத் திற்கான ஊதியம்தான் ஊழியர்களுக்குக் கிடைத்துள் ளது. நிறுவனத்தின் உரிமையாளரே நேரடியாக ஒரு உறுதிமொழியை அளித் தார், ஜனவரியில் டிசம்பருக்கான ஊதியம் தரப்பட்டுவிடுமென்று. உரிமையாளரின் உறுதிமொழியே காற்றில் பறக்கவிடப்பட்டால் வேறு யாரிடம் நாங்கள் சொல்வது என்கிறார்கள் ஊழியர்கள். தங்கள் சேமிப்பை வைத்து கடந்த இரண்டு மாதங்களாக வாழ்க்கையை ஓட்டியிருக் கிறார்கள் ஊழியர்கள். இதற்கிடையில், போட்டி நிறுவனமான இண்டிகோ வில் கிங்ஃபிஷர் நிறுவனத்தைச் சேர்ந்த 20 பைலட்டு கள் சேர்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது. பிப்ரவரி15 ஆம்தேதிக்குள் சேர்பவர்க ளுக்கு போன° தரப்படும் என்று இண்டிகோ நிறுவ னம் கூறியிருக்கிறது. புதிதாக 20 போக்குவரத்து விமானங்களை வாங்கத் திட்டமிட் டுள்ள இண்டிகோ, ஊழியர்களைத் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் படு தீவிரமாக இறங்கியிருக்கிறது. பாதுகாப்பில் ஓட்டை? இதற்கிடையில், பயணிகள் பாதுகாப்பு குறித்த கேள்வியும் எழுந்துள்ளது. இரண்டு மாதங்களாக ஊதி யம் வாங்காமல் விமா னத்தை இயக்கப்போகும் பைலட் மற்றும் ஊழியர் கள் மனநிலை எப்படியிருக் கும் என்று மத்திய சிவில் போக்குவரத்து பொது இயக்குநர் அலுவலகம் ஆய்வு செய்திருக்கிறது. நெருக்கடியில் இருக்கும் நிறுவனங்கள் சிக்கன நடவ டிக்கை என்ற பெயரில் பாது காப்பு ஏற்பாடுகளைக் குறைத்து விடுகின்றனவா என்பதையும் இந்த ஆய்வு கணக்கில் எடுத்துக் கொண் டுள்ளது. அனைத்து தனி யார் நிறுவனங்களையும் இது போன்ற ஆய்வுக்கு உட் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பயணிகள் தரப் பிலிருந்து எழுந்துள்ளது. ஏதாவது அசம்பாவிதம் நடப்பதற்கு முன்னால் பாது காப்பு ஏற்பாடுகளை உத்த ரவாதப்படுத்துவது அவ சியம் என்பது பயணிகளின் கருத்தாகும். ஜெட் விமானப் போக் குவரத்து நிறுவனமும் எப் போது ஊதியம் தரப்போகி றோம் என்று ஊழியர் களுக்குத் தெரிவிக்கவில்லை. ஆனால் பிப்ரவரி 15 ஆம் தேதியன்று ஒரு குறிப் பிட்ட தொகையாவது ஊழியர்களுக்குத் தரப்ப டலாம் என்று எதிர்பார்க் கப்படுகிறது. ஆனால் எங் களுக்கு இதுவரை எந்தத் தக வலும் இல்லை என்று ஊழி யர்கள் கூறுகிறார்கள். மேலும், நிர்வாகத்தரப்பிலி ருந்து வேண்டுமென்றே இதுபோன்ற செய்திகள் வெளியிடப்படுகின்றன. இப்படி ஒரு தேதியைச் சொன்னால், வேலையிலி ருந்து வெளியேறுபவர்க ளைத் தடுக்க முடியும் என் பது நிர்வாகத்தின் உத்தியாக இருப்பதாகவும் ஊழியர் கள் கருத்து தெரிவிக்கிறார் கள். தொடரும் நஷ்டம் ஜெட் நிறுவனத்தின் கடன் அளவு 14 ஆயிரம் கோடி ரூபாயைத் தொட்டி ருக்கிறது. ஒவ்வொரு காலாண்டிலும் தொடர்ந்து நஷ்டம்தான். பொதுவாக மூன்றாவது காலாண்டில் தான் விமானப் போக்கு வரத்து நிறுவனங்களுக்கு நல்ல காலமாகும். அந்தக் காலாண்டில் 101 கோடி ரூபாய் நஷ்டத்தை ஜெட் ஏர் வே° சந்தித்திருக்கிறது. கிட்டத்தட்ட எதிர்காலமே கேள்விக்குறியாகித்தான் நிறுவனம் நிற்கிறது. முதலா ளித்துவ வழக்கப்படி முத லில் காவு கொடுக்கப்படு வது ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன் தான். அதை உறுதிப்படுத் தும் வகையில்தான் இரண்டு மாத ஊதியத்தைத் தராமல் ஜெர் ஏர்வே° மற்றும் கிங் ஃபிஷர் நிறுவனங்கள் முனைப்புக் காட்டுகின்றன. இதில், பொதுத்துறையில் இருக்கும் இந்தியன் ஏர் லைன்° நிறுவனத்தை வேறு தனியாருக்கு தாரை வார்த்து விடலாம் என்கி றார்கள் காங்கிர° தலை மையிலான ஐக்கிய முற் போக்குக் கூட்டணி அரசு.

Leave a Reply

You must be logged in to post a comment.