சிறு, குறு தொழில்களை அழிக்கும் 10மணி நேர மின்வெட்டு உற்பத்தியாளர், தொழிலாளர் போர்க்கோலம் மதுரை, பிப்.14- மதுரை மாவட்டம், கப்பலூரில் தமிழகத்தின் இரண்டாவது பெரிய தொழிற்பேட்டை உள்ளது. இங்கு 400க்கும் அதிகமான சிறு, குறுந் தொழிற் கூடங்கள் உள்ளன. ஆட் டோமொபைல் கூட்டுறவு தொழிற் பேட்டை, மகளிர் தொழில் நிறு வனங்களும் நூற்றுக்கும் மேல் இயங்கி வருகின்றன. தொடர் மின் வெட்டால் இங்குள்ள தொழிற் சாலைகளில் உற்பத்தி கடும் பாதிப் புக்குள்ளாகியுள்ளது. பல தொழிற் சாலைகளில் எந்த ஷிப்டையும் முறை யாக இயக்க முடியாத நிலை உள்ளது. தமிழக அரசின் 10 மணி நேர மின்வெட்டைக் கண்டித்து கப்ப லூர் தொழிற்பேட்டை சிறு-குறு உற்பத்தியாளர்கள், அங்கு பணியாற் றும் ஆயிரக்கணக்கான தொழிலா ளர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம், தர்ணா போராட் டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். செவ்வாயன்று காலை தொழிற் பேட்டையிலுள்ள 500க்கும் அதிக மான தொழிற்கூடங்கள் அடைக்கப் பட்டன. இதனால் தொழிற் பேட்டை வளாகமே வெறிச்சோடிக் காணப்பட்டது. உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கப்பலூர் மின்வாரிய அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட் டனர். தர்ணாவிற்கு தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். தர்ணாவை சங்க செயலாளர் முத்து ராமன் துவக்கி வைத்தார். தமிழகத் தின் இரண்டாவது பெரிய தொழிற் பேட்டையான இங்கு மின்வெட் டால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. 50 சதவீத உற்பத்தி இழப்பு, 20 சதவீத உற்பத்தி விலை அதிகரிப்பு, 20 சதவீத கழிவு அதி கரிப்பு என்பது தொடர்கிறது. இதனை கருத்தில் கொண்டு தொழிற்பேட் டைகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் உற்பத்தி முழுமையான பயன்பாடு நிலைக்கு சமமான நிலையை அடையும் வரை தமிழகத் தின் அனைத்துப் பகுதிகளுக்கும் ஒரே சீரான மின்வெட்டை அமல் படுத்த வேண்டும். மின்தடையால் ஏற்பட்ட நஷ் டத்தை அரசு ஈடுகட்ட வேண்டும். அந்நிய நாட்டு தொழிற்கூடங் களுக்கு அளிக்கப்படும் அதே சலு கைகளை சிறு, குறுந்தொழில்க ளுக்கும் அளிக்க வேண்டும். மின் தடை நேரத்தை கணக்கிட்டு தொழில் கடன்களுக்கான வட்டி 6 சதவீதமே வசூலிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை போராட்டக்காரர் கள் வலியுறுத்தினர். சிறு,குறுந்தொழில்களை சிதை யில் வைக்கும் சீரில்லா மின்சாரம், பதை பதைக்குது நெஞ்சம், இந்த வஞ் சத்தை ஏற்கமுடியுமோ என தொழி லாளர்கள் கொந்தளித்தனர். மின்வெட்டால் ஒவ்வொரு குடும்பமும் படும்பாட்டை சொல் வதற்காக நடத்தப்பட்ட தர்ணா போராட்டத்திற்கு அனுமதியளிக்க காவல்துறையினர் முடிந்தமட்டும் போக்குகாட்டியுள்ளனர். இப்படி, இப்படித்தான் பேசவேண்டும் என் பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனை களுக்கு உட்பட்டே அனுமதியளித் தனர். முதலில் அரைமணிநேரம் மட் டும் அனுமதி எனக் காவல்துறை கூறி யதாகவும், தர்ணாபோராட்டத்தின் நேரத்தை கூடுதலாக்கி வாங்குவதற்கு பாடாய்ப்பட வேண்டியதாயிற்று என்றார் உற்பத்தியாளர் ஒருவர். போராட்டத்தை ஒட்டி ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந் தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.