ஹா அசத்தல் சதம் துலீப் கோப்பை இறுதி ஆட்டத்தில் கிழக்கு மண் டலம் ஒரு முக்கியமான கட்டத்தைக் கடந்துள்ளது. ம த்திய மண்டலத்துக்கு எதிரான ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் கிழக்கு மண்ட லம் 237 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய டெஸ்ட் ஆட்டக்காரர் விருத்தமான் சஹா அடித்த 170 ஓட்டங்கள் முக்கிய பங்கினை ஆற்றியுள்ளது. இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியபின் ஒன்பதாவது ஓவரில் அனுஸ்டப் மஜூம்தார் ஆட்டம் இழந்தார். ஆட்டத்தின் முக்கியமான தருணத்தில் அவர் வெளியேறினார். சஹாவும் அணித்தலைவர் நட்ராஜ் பெஹேராவும் ஐந்தாவது விக்கெட்டுக்கு 109 ஓட்டங்களைச் சேர்த்தனர். பெஹேரா ஆட்டம் இழந்தபின் சாமந்த்ராய், சஹாவுடன் இணை சேர்ந் தார். இருவரும் சேர்ந்து 87 ஓட்டங்கள் எடுத்தனர். சாமந்த்ராய் அவசியமின்றி ஆட்டம் இழந்தார். அடுத்தடுத்து வந்த கிழக்கு மண்டல பின்வரிசை ஆட்டக்காரர் கள் வந்தவேகத்தில் வெளியேறினர். சஹாவும் கடைசி ஆட்டக்காரர் திண்டாவும் சேர்ந்து 45 ஓட்டங்களைக் குவித்தனர். கிட்டத்தட்ட கிழக்கு மண்டல அணியை சஹா தன் தோள்களில் சுமந்தார். தான் ஆடுவதுடன் மற்றவர்களை ஆட வைக்கும் பணியையும் அவர் சிறப்புடன் செய்தார். சூழ்நிலைக்கேற்ப பொறுமையும் வேகமும் காட்டினார். அடிக்க வேண்டிய பந்துகளை அவர் தவறவிடவில்லை. அவர் 245 பந்துகளைச் சந்தித்து 25 நான்குகளும் ஒரு ஆறும் அடித்து 170 ஓட்டங்களை சேர்த் தார். கடைசி ஆட்டக்காரராக அவர் வெளியேறினார். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் மத்திய மண்டலம் விக்கெட் இழப் பின்றி 88 ஓட்டங்கள் எடுத்துள்ளது. அதனுடைய நட்சத்திர ஆட்டக்காரர் வினீத் சக்சேனா விரல் முறிவு காரணமாக ஆடமாட்டார்.

Leave A Reply

%d bloggers like this: