பிளேட்டர் இந்தியா வருகிறார் இந்திய கால்பந்து மேம்பாட்டுத்திட்டத்தின் வளர்ச்சி குறித்து மதிப்பீடு செய்வதற்காக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) தலைவர் செப் பிளேட்டர் மார்ச் மாதத்தில் இந்தியா வருகிறார். இந்திய திட்டத்திற்கு பிபா ‘கோல்’ என்று பெயரிட்டுள்ளது. 2007ம் ஆண்டுக்குப்பின் பிளேட்டர் மீண்டும் இந்தியா வருகிறார். 2017ம் ஆண்டில் 17 வயதுக்குட்பட்டோர் உலகக்கோப்பையை நடத்த இந்தியா விழைகிறது. கொள்கையளவில் பிபா அதற்கு இசைவு அளித்துள்ளது. அடுத்த மாதத்தில் இது குறித்துஇறுதி முடிவுகள் எடுக்கப்படும். பிளேட்டர் மார்ச் 9 அன்று இந்தியா வருகிறார். ஏஎப்சி சேலஞ்ச் கோப்பை போட்டிகளைக் காண காத்மண்டு வரும் பிளேட்டர் இந்தியாவுக்கும் வருகிறார்.

Leave a Reply

You must be logged in to post a comment.