மற்குவங்க சட்டமன்ற கட்டிடத்தில் செய்தியாளர்கள் கூட்டம் நடத்தத் தடை சாலையோர நடைமேடையில் சந்திப்பு நடந்தது கொல்கத்தா, பிப். 14- சட்டமன்றக்கூட்டம் இல்லாத நாட்களில் சட்ட மன்ற ஊடக மையத்தில் செய்தியாளர்கள் கூட்டம் நடத்துவதற்கு மேற்குவங்க சட்டமன்ற சபாநாயகர் பிமன் பண்டோபாத்யாய தடை விதித்துள்ளார். இதைஎதிர்த்து சட்ட மன்றத்துக்கு வெளியே உள்ள சாலையோர நடை மேடையில் செய்தியாளர் கூட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் சூர்யகாந்த மிஸ்ரா நடத்தினார். சட்டமன்ற வளாகத்தின் வடக்கு வாயிலில் உள்ள ஆக்லாந்து சாலையில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் டாக்டர் சூர்ய காந்த மிஸ்ரா பேசினார். எங்களுக்கு உரிமைகள் திரும்பக்கிடைக்கும் வரை, சாலைகளில் அல்லது எங் காவது நின்றபடி செய்தியா ளர்களிடம் பேசுவோம் என்று அவர் கூறினார். ‘இது எதிர்ப்பு நடவடிக்கை மட்டும் இல்லை. இது உங்களுக்கும் எனக்கும் உள்ள கட்டாயம். நானும் நீங்களும் சட்டமன்ற கட் டிடத்திற்குள் பேச அனுமதி இல்லை’ என்றும் அவர் சொன்னார். சபாநாயகரின் முடிவு கள் ஆய்வுக்குட்பட்டவை அல்ல என்று பண்டோ பாத்யாய கூறினார். வான ளாவிய அதிகாரம் என்ற புகழ் பெற்ற வாசகம் நினை வுக்கு வருவதில் தவறில்லை. சட்டமன்றத்திற்குள் வருடம் முழுவதும் சட்ட மன்ற உறுப்பினர்கள் செய்தியாளர்களிடம் பேச அனுமதிக்க வேண்டும் என்று டாக்டர் மிஸ்ரா, சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள் ளார். சட்டமன்றம் இல்லாத நாட்களில் உங்களுக்கு ஜனநாயகம் இல்லை என்று கூற முடியாது என்றும் அவர் கடிதத்தில் கூறியுள் ளார். அரசின் உச்சமட்டத் தில் உள்ளவர்களின் அரசி யல் நிர்ப்பந்தம் இதில் உள் ளது என்று டாக்டர் மிஸ்ரா கூறினார். சபாநாயகரின் அதிகாரம் பற்றி கேள்வி எழுப்பவில்லை என்று கூறிய மிஸ்ரா, அரசியல் அதிகாரத்தைப் பயன் படுத்தும் விதமே நல்லாட்சி அல்லது மோசமான ஆட்சி என்பதைத் தீர்மானிக்கிறது என்றும் அவர் சொன்னார். இதுபற்றி விவாதிக்க அனைத்துக்கட்சிக் கூட் டம் நடத்தப்பட்டால், தான் அதில் கலந்துகொள்வதாக வும் அவர் தெரிவித்தார். டாக்டர் மிஸ்ராவின் கடிதத்தைத் தான் இன்னும் படிக்கவில்லை என்று சபாநாயகர் பிமன் பண் டோபாத்யாய கூறினார். பிரச்சனைக்கு தீர்வு காண அனைத்துக்கட்சிக் கூட்டம் கூட்டப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது அவர் இவ்வாறு சொன்னார். சட்டமன்றம் நடை பெறாத நாட்களில் சட்ட மன்ற ஊடக மையத்தில் செய்தியாளர் கூட்டம் நடத்த அனுமதியில்லை என்று சபாநாயகர் தெரி வித்துள்ளதாக சட்டமன்ற செயலாளர் பிப்ரவரி 10 அன்று வெளியிட்ட சுற் றறிக்கை தெரிவிக்கிறது. ‘நாடாளுமன்ற ஜன நாயகத்தின் மீது தொடுக் கப்பட்ட முன்னெப் போதும் இல்லாத தாக்குதல், என்று இடதுசாரிக் கட்சி தலை வர்கள் இதனை கண்டித் துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: