மேஜிக் பேனா மூலம் மோசடி: தனியார் வங்கி ஊழியர்களின் தில்லுமுல்லு காப்பீட்டு பாலிசிகளை மீண்டும் புதுப்பித்துக் கொடுக்கிறோம் என்று கூறி கோடக் மகிந்திரா வங்கி யைச் சேர்ந்த ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்திருக்கிறார்கள். தலைநகர் தில்லியில் கோடக் மகிந்திரா வங்கியின் கிளை உள்ளது. வங்கி நடத்தும் காப்பீட்டு நிறுவனத்திற் கும் வங்கியில் உள்ள ஊழியர்களையே பயன்படுத்திக் கொள்கிறார்கள். ரவிக்குமார் மற்றும் வினிஷ் ஆகிய இரு ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் சென்று ரொக்கம் மற்றும் காசோலைகளைப் பெற்று வரும் வேலையைச் செய்து கொண்டிருந்தனர். மஹாபீர் சிங் என்ற வாடிக் கையாளர் ஒருநாள் காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனியார் வங்கியில் பணி யாற்றும் இந்த இருவரும் தன்னை ஏமாற்றி விட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். அவர்களைப் பிடித்து விசாரித்தபோது 50க்கும் மேற் பட்ட வாடிக்கையாளர்களை ஏமாற்றிய விபரம் வெளிவந் தது. மேலும், மஹாபீர்சிங்கிடம் காசோலையை நிரப்பி வாங்கியபோது, யார் பெயருக்குத் தர வேண்டும் என்ற இடத்தை அவர் காலியாக விட்டிருந்திருக்கிறார். இவர் கள் வந்தவுடன் கேட்டு நிரப்பித்தரலாம் என்று மஹா பீர்சிங் காத்திருந்தார். ரவிக்குமார் மற்றும் வினிஷ் ஆகி யோர் அங்கு சென்றபோது, அதை நிரப்பத் தங்களிடம் இருந்த பேனாவைத் தந்திருக்கிறார்கள். தனது கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டபிறகும், காப்பீட்டு பாலிசிகள் புதுப்பிக்கப்படவில்லையே என்று நினைத்த மஹாபீர்சிங், மேலும் விசாரித்தபோது ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். அவர்கள் தந்தது மேஜிக் பேனா. சில மணிநேரங்களில் எழுதப்பட்டது அழிந்துவி டும். நிறுவனத்தின் பெயரை அழித்துவிட்டு தங்கள் பெயரை அதில் நிரப்பிக் கொண்டார்கள். அவர்களைக் காவல்துறையினர் பிடித்து விசாரித்து வருகிறார்கள். அப் போது, தனியார் வங்கியான கோடக் மகிந்திரா செயல் பாட்டில் ஏராளமான ஓட்டைகள் உள்ளன. அவற்றை நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம் என்றனர் ரவிக்கு மார் மற்றும் வினிஷ்.

Leave A Reply

%d bloggers like this: