மூத்த வழக்கறிஞர் இரா.சுப்பிரமணி காலமானார் சென்னை, பிப்.14- சென்னையில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சுப்பிரமணியன் காலமானார். அவருக்கு வயது(65). தமிழகத்தில் மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி சார்பில் தொடுக்கப்பட்ட பல்வேறு வழக்குகளில் வாதாடி நீதி பெற்றுத்தர போராடிய மூத்த வழக்கறிஞர் ஆர்.சுப்பிர மணியன் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாயன்று காலை 8 மணியளவில் காலமானார். கோவில்பட்டியில் ஹாக்கி மைதானத்தை தனியார் ஆக்கிரமிப்பு செய்ததை எதிர்த்து மார்க்சி°ட் கம்யூ னி°ட் கட்சி தொடுத்த வழக்கு, மதுரையில் நடைபெற்ற மாநகராட்சி இடைத்தேர்தலில் மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி வேட்பாளர் கோ.சந்திரசேகரன் வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அவர் ஆஜராகி வாதாடியுள்ளார். அவருக்கு மனைவி, 1 மகன், 1 மகள் உள்ளனர். அன்னாரது உடலுக்கு மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சித் தலைவர்களும், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். அன்னாரது இறுதிநிகழ்ச்சி புதனன்று காலை 8 மணியளவில் ஓட்டேரி மயானத்தில் நடைபெறுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.