முன்னாள் நீதிபதியின் சொத்துக்கணக்கு அறிக்கை தாக்கல் புதுதில்லி: முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும் தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவருமான கே.ஜி. பால கிருஷ்ணன் மற்றும் அவரது குடும்ப உறுப் பினர்களுக்குச் சொந்தமான சொத்துகள் குறித்த முழு விசாரணை அறிக்கையை மத்திய நேரடி வரிகள் ஆணையத்திடம் வருமான வரித்துறை சமர்ப்பித்தது. கொச்சி வருமான வரித்துறையினரின் புலனாய்வுக் குழு மற்றும் மும்பை யூனிட் இணைந்து இந்த அறிக்கையைத் தொகுத் துள்ளன. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியின் சொத்துக்கணக்கு விவரம் குறித்த முழு விசாரணை அறிக்கை கடந்த ஆண்டே சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. தற்போது முன்னாள் உச்சநீதிமன்ற நீதி பதியின் குடும் பத்தினர் மற்றும் உறவி னர்களுக்குச் சொந்த மான சொத்துகள் மற்றும் முதலீடுகள் குறித்த முழு விசா ரணை அறிக்கை தாக்கல் செய்யப் பட்டுள்ளது என்று உயர் வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் மேற்கொண்டு எந்த விவரத் தையும் அளிக்க அவர்கள் மறுத்துவிட் டனர். 2007ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதி பதியாகப் பதவியேற்ற கே.ஜி. பால கிருஷ்ணன் 2010 மே 12ம் தேதி ஓய்வு பெற் றார். அதன்பின்னர் அவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

Leave a Reply

You must be logged in to post a comment.