மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலையீட்டால் பெரும் வெற்றி! பார்வையற்ற ஐஏஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகளுக்கு பணி உத்தரவு கிடைத்தது புதுதில்லி, பிப்.14- பார்வைத்திறன் இல்லாத மாற்றுத் திறனாளிகள் என்ற ஒரே காரணத்திற் காக, ஐஏஎஸ், ஐஎப்எஸ் போன்ற இந் திய நாட்டின் மிக உயரிய ஆட்சிப்பணி படிப்பில் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற்றும்கூட பணி வாய்ப்பு மறுக்கப் பட்ட அவலத்திற்கு எதிராக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலையீட் டுடன் மாற்றுத்திறனாளிகள் உரிமை பாதுகாப்பு அமைப்பு நடத்திய சட்டப் போராட்டம் மகத்தான வெற்றி பெற் றுள்ளது. பல்வேறு நீதிமன்றங்கள் மற்றும் மத்திய தீர்ப்பாணையத்தில் பல உத்தரவு களுக்குப் பின்னரும், 2008ம் ஆண்டு நடைபெற்ற ஐஏஎஸ் மற்றும் சிவில் சர்வீசஸ் தொடர்பான தேர்வுகளில் வெற்றிபெற்ற கண்பார்வையற்ற மாற் றுத்திறனாளிகளுக்கு பணி வழங்காமல், அலட்சியப் போக்குடன் நடந்து கொண்ட அதிகாரவர்க்கத்தை எதிர்த்து மாற்றுத்திறனாளிகள் உரிமைக்கான அமைப்பு 2010ம் ஆண்டு வழக்கு தொடுத்தது. 2011 நவம்பர் 29ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உரிமைக் கான அமைப்பின் பிரதிநிதிகள் குழு பிர தமர் மன்மோகன்சிங்கைச் சந்தித்து முறையிட்டது. மேலும், சம்பந்தப்பட்ட அமைச்சர் களையும் சந்தித்தது. விடாமுயற்சி வெற்றிதரும் என் பதற்கேற்ப, பிருந்தா காரத் தலைமை யிலான குழுவினரின் தொடர்முயற்சிக ளால் பிரதமர் மன்மோகன் சிங் அறிவு றுத்தலின்படி மாற்றுத்திறனாளிகள் 7 பேருக்கும் அஜித்குமார் (ஐஏஎஸ்), ஆஷிஷ் சிங் தாகூர் மற்றும் ஸ்ரீநிவாஸ் (ஐஎப்எஸ்), பூர்ணிமா ஜெயின் (ஐஆர் பிஎஸ்), ஷ்ரவண்குமார் (ஐசிஏ) பவன் குமார் (இந்தியத் தபால் துறை), சுபோத் குமார் (வெடிமருந்துத் தொழிற்சாலை) பணி உத்தரவு வழங்கப்பட்டது. மற் றும் இருவருக்கு இதுவரை பணி உத் தரவு வழங்கப்படவில்லை. பிருந்தா காரத் நன்றி இந்த விவகாரத்தில் அப்பட்டமான பாரபட்சம் மற்றும் மாற்றுத்திறனாளி கள் சட்டம் 1995க்கு எதிரான போக் கினை இடையிட்டுத் தடைசெய்த பிர தமர் மன்மோகன் சிங்கிற்கு 2012 பிப்ரவரி 13ம் தேதி பிருந்தா காரத் கடிதம் எழுதி தனது நன்றியைத் தெரி வித்தார். அவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், ஐஏஎஸ் மற்றும் சிவில் சர்வீசஸ் பணிகளில் கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளைப் பணியில் சேர்த்துக் கொள்ளாத விவகாரத்தில் தலையிட்ட மைக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடன் வந்த தேசிய மாற்றுத்திற னாளிகள் உரி மைக்கான அமைப்பின் பிரதிநிதிகள் குழு தங்கள் முன் வைத்த கோரிக்கை களில், இருவர் தவிர மற்றவர்களுக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டு விட்டது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடை கிறேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.