மணிப்பூர் தேர்தலில் ஆள் மாறாட்டம் இம்பால், பிப்.14- மணிப்பூரில் ஜனவரி 28 அன்று நடந்த சட்டமன் றத் தேர்தலின் போது, தேர் தல் ஆணையப் பார்வையா ளர்களும், மணிப்பூர் தேர் தல் அதிகாரிகளும் ஆள் மாறாட்டங்களைக் கண்ட தாகக் கூறப்படுகிறது. தேர்தல்களில் ஆள் மாறாட்டம் நடப்பதாக வேட்பாளர்களிடம் இருந்து 76 புகார் மனுக்கள் வந்துள் ளன. அதையடுத்து வாக்கா ளர்களின் படங்களைப் பரி சீலித்தபோது ஆள் மாறாட் டம் நடந்தது தெரியவந் துள்ளது. சாய்கோட், காங் கோங்பி, கரோவ், சன்டேப் தொகுதிகளில் இவ்வாறு நடந்துள்ளது. சில இடங்க ளில் பல பெண்களின் வாக் குகளை ஆடவர்களும், ஆடவர் வாக்குகளை பெண் களும் வாக்களித்துள்ளனர். வாக்குப் பதிவின்போது எடுக்கப்பட்ட புகைப்ப டத்தை வாக்காளர் பட்டிய லில் உள்ள புகைப்படத் துடன் ஒப்பிட்டுப் பார்த்த போது இது தெரியவந்தது. மறு தேர்தல் நடக்குமா என்பது தெரியவில்லை. கஜக்ஸ்தான் தூதர் காயமின்றி தப்பினார் கொல்கத்தா, பிப்.14- இந்தியாவுக்கான கஜ க்ஸ்தான் தூதர் தௌலத் குவானிஷேவ் சாலை விபத் தில் காயமின்றி தப்பினார். கொல்கத்தா பெருநகர் சாலைகளில் இதுபோன்ற சிறு விபத்துக்கள் ஏற்படுவ துண்டு. தூதரின் கார் முன் னாள் சென்று கொண்டி ருந்த பைலட் காரின் பின் னம் பகுதியில் மோதியது. மோட்டார் சைக்கிளு டன் மோதும் நிலையில் இருந்த பைலட் கார், திடீ ரென பிரேக் அடித்து நின் றது. அதன்பின் வந்து கொண்டிருந்த தூதரின் கார் பைலட் காரின் பின் புறத்தில் இடித்தது. கஜக் தூதர் காருக்குள் முன்னும் பின்னும் அசைந்ததைத் தவிர அவர் காயமடைய வில்லை. எஸ்பிஐக்கு ரூ.100 கோடி இழப்பு ஏற்படலாம் மும்பை, பிப்.14- 122 இரண்டாம் தலை முறை அலைக்கற்றை அனு மதிகள் ரத்து செய்யப்பட் டதையடுத்து மிக மோச மான சூழல் ஏற்பட்டால் பாரத ஸ்டேட் வங்கிக்கு சுமார் ரூ.100 கோடி இழப்பு ஏற்படக்கூடும் என்று பாரத ஸ்டேட் வங்கி தலைவர் பிரதீப் சௌத்ரி செய்தியா ளர்களிடம் தெரிவித்தார். இரண்டு நிறுவனங்க ளுக்கு வங்கி ரூ.200 கோடி யை கடனாக அளித்துள் ளது. மிகவும் பலவீனமா னது என்று கருதப்படும் நிறுவனத்துக்கு உத்தரவா தம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இரண்டாவது நிறுவனத்துக்கு உத்தரவா தம் அளிக்கப்படவில்லை என்றும் அவர் சொன்னார். இரண்டாவது நிறுவனம் பலவீனமானது அல்ல. வேறு வகைகளில் அது கட னை அடைக்கக் கூடும் என் றும் அவர் கூறினார். டாடா இயந்திரங்களுக்கு நெருப்பு சைபா சா, பிப்.14- ஜார்கண்ட் மாநிலத் தின் கிழக்கு சிங்பும் மாவட் டத்தில் சோட்டா நகர காவல் நிலைய எல்லைக் குட்பட்ட சங்குராவில் மாவோயிஸ்ட்டுகள் ஒருவ ரைச் சுட்டுக் கொன்றது டன் டாடா எஃகு நிறுவ னத்துக்குச் சொந்தமான இரண்டு வாகனங்கள் நான்கு இரு சக்கர வாகனங்கள், ஒரு தண்ணீர் லாரி, மூன்று துளைபோடும் இயந்திரங் கள் ஆகியவற்றுக்கு நெருப்பு வைத்தனர். காவல்துறைக்கு தகவல் அளிப்பவர் என்று கூறி, ஒரு நபரை அவர்கள் சுட் டுக் கொன்றனர். வனப்பகு தியில் டாடா நிறுவனம் நடத்திவரும் சுரங்க ஆய்வு களில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் எரிக்கப்பட் டன. தகவல் அறிந்தவுடன் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந் தனர். குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறை தேடு தல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளது.

Leave A Reply