மறைமலைநகர் அருகே தண்டவாளத்தில் விரிசல் : சென்னை ரயில்கள் தப்பின செங்கல்பட்டு, பிப். 14 – மறைமலைநகர்- சிங்க பெருமாள் கோவில் இடையே உள்ள ரயில் தண் டவாளத்தில் செவ்வா யன்று காலை விரிசல் ஏற் பட்டு இருந்தது. இதனை ஆய்வுப் பணியில் இருந்த உதவி பொறியாளர் பாபு கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் சிங் கப்பெருமாள் கோவில் ரயில் நிலைய அதிகாரிக ளுக்கு தகவல் தெரிவித்தார். அப்போது 7.50 மணி அள வில் மதுரையில் இருந்து சென்னை நோக்கி நிஜாமு தீன் எக்°பிர° ரயில் வேக மாக வந்து கொண்டிருந் தது. உடனடியாக ரயில் என்ஜின் ஓட்டுநருக்கு தக வல் தெரிவிக்கப்பட்டு சிங் கப்பெருமாள்கோவில் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப் பட்டது. இதே போல் பின் னால் பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த எக்°பிர° ரயில் செங் கல்பட்டு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. செங்கல் பட்டு-சென்னை பீச் மின் சார ரயிலும் நிறுத்தி வைக் கப்பட்டது. இதனால் ப யணிகள் மிகவும் அவதி அடைந்தனர். ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று விரிசல் ஏற்பட்ட தண்டவாளத்தை சரி செய்தனர். பின்னர் 8.05 மணிக்கு அனைத்து ரயில்க ளுடன் மெதுவாக புறப் பட்டு சென்றன.

Leave A Reply