மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறையுங்கள் : காசப் புதுதில்லி, பிப்.14- மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரி மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய அஜ்மல் காசப் சார்பில் உச்சநீதிமன்றத் தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மும்பையில் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக் கிச் சூடு நடத்தி பல உயிர்களை பலி வாங்கிய காசப்பிற்கு பயங் கரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கின் விசா ரணையின் போது, காசப் சார் பில் வாதாட நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ராஜூ ராமச்சந் திரன், ஒரு தீவிரவாதியை உயி ருடன் வைத்திருப்பதால் ஆகும் செலவை நீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்குவதா அல்லது ஆயுள் தண்டனை வழங்குவதா என் பதை மட்டுமே பரிசீலிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

Leave A Reply