மயூகா சாதனை ஜெர்மனி லுட்விக்ஷாபன் நகரில் நடந்த சர்வதேச தடகளப் போட்டியில் இந்திய தாண்டுதல் வீராங்கனை மயூகா ஜானி தங்கம் வென்றுள்ளார். உள் அரங்கப்போட்டியில் அவர் தேசிய சாதனை படைத்துள்ளார். மயூகா ஜானி 6.44 மீ நீளம் தாவினார். கடந்த 9 ஆண்டுக ளாக அஞ்சு ஜார்ஜ் பெயரில் இருந்து வரும் 6.40 மீ சாத னையை மயூகா முறியடித்துள்ளார். மும்மடித்தாண்டலில் ஒலிம்பிக் தகுதி பெற்றுள்ள மயூகா, மூன்று மாத காலமாக ஜெர்மனியில் பயிற்சியாளர் ஜார்ஜ் ராம்லோவிடம் பயிற்சி பெற்று வருகிறார். ஜெர்மனியில் மயூகா கலந்து கொள்ளும் மூன்றாவது தடகளப்போட்டி இது. ஜனவரி 22ல் நடந்த பிராந்தியப் போட்டியில் இவர் 6.38 மீ தூரம் தாண்டி வெற்றிபெற்றார். பிப்ரவரி 4ல் நடந்த வடக்கு ஜெர்மன் போட்டிகளில் மூன் றாவதாக வந்தார். நவம்பர் 25 அன்று சொந்த பயிற்சியாளர் சி.ஆர்.குமாருடன் மயூகா ஜெர்மனி வந்தார். பிப்ரவரி 26 அன்று இவர் இந்தியா திரும்புகிறார். மும்மடித்தாண்டலில் ஒலிம்பிக் தகுதி பெற்றுள்ள மயூகா, நீளந்தாண்டலில் தகுதிபெறவில்லை. அதற்கு இவர் 6.65 மீ தூரம் தாவ வேண்டும். இந்தியா திரும்பிய பின் துருக்கி இஸ்தான் புல்லில் மார்ச் 9-11 வரை நடைபெறும் உலக உள் அரங்க தடகள சாம்பியன் போட்டிகளில் கலந்து கொள்ள மயூகா துருக்கி செல்கிறார்.

Leave A Reply