புதிய பென்சன் திட்டத்தை கைவிடுக! ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் மே.பாளையம், பிப். 14- புதிய பென்சன் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரமடையில் மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காரமடை குந்தா காலனியில் உள்ள மின்விநியோக அலுவலகம் முன்பு நேற்று செவ்வாயன்று (பிப்.14) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத் தலைவர் ராமன் தலைமை வகித்தார். சிஐடியு வட்டச் செயலாளர் பெருமாள் ஆர்பாட்டத்தை துவக்கி வைத்து கண்டன உரையாற்றினார். இந்த ஆர்பாட்டத்தின் போது, மின்வாரியம் பொதுத் துறையாகவே தொடர வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.1.50 லட்சமாக உயர்த்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் சிவசங்கரன், சுப்பிரமணியம், நாராயணன், காமாட்சி, ராஜ லட்சுமி, ஜெயபிரதீஷ், ரங்கசாமி உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: