அவசியமற்ற சர்ச்சை முடிந்துவிட்டது புதுதில்லி, பிப். 13 – இந்திய தலைமைத் தளபதி வி.கே.சிங்கின் வயது குறித்த அவசியமற்ற சர்ச்சை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு டன் முடிவுக்கு வந்துவிட்டது என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறினார். அதுகுறித்த அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வருமாறு பாதுகாப்புத்துறை அதிகாரி களிடமும் அவர் தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு, தேசிய நலன் ஆகியவை உயர்ந் தவை. எனவே அவற்றை வலுப்படுத்த நாம் அனை வரும் ஒன்றாக உழைக்க வேண்டும் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறி னார். ஜெனரல் சிங் கின் பிறந்த தேதி குறித்த அரசின் முடிவு அவருடைய அரசுச் சேவைகளுக்குப் பொருந்தும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப் பளித்துள்ளது. அவருடைய தகுதி திறமை பற்றி தீர்ப்பு விமர்சிக்கவில்லை என்றும் அது தெரிவித்தது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை யடுத்து ஜெனரல் சிங் பதவி விலக விருப்பம் தெரிவித்தாரா என்று நிருபர்கள் அமைச்சரி டம் கேட்டனர். தற்போதைய தளபதி மீது அரசுக்கு நம்பிக் கை உண்டு என அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது என்று அமைச்சர் பதிலளித் தார். அவகாசம் கேட்கும் முன்னாள் அமைச்சர்கள் பெங்களூரு, பிப். 13 – கர்நாடகா சட்டமன் றத்தில் ஆபாசப்படம் பார்த்த தாகக் குற்றம்சாட்டப்பட்ட பாஜக முன்னாள் அமைச் சர்கள் மூவருக்கும் சட்டமன்ற சபாநாயகர் கே.ஜி.பொப்பையா நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதற்குரிய காலத்தை ஒரு வாரம் நீட்டிக்குமாறு அவர்கள் கேட்டுள்ளனர். சபாநாயகர் அனுப்பிய காரணம் கேட்கும் நோட்டீ சுக்கு அவர்கள் திங்கட்கிழ மைக்குள் பதிலளிக்க வேண் டும். கால அவகாசத்தை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கு மாறு ஜி.லட்சமண் சாவதி, சி.சி.பட்டீல், ஜே.கிருஷ்ண பாலமர் ஆகிய மூன்று அமைச் சர்களும் சபாநாயகருக்கு கடி தம் கொடுத்துள்ளனர். மூன்று அமைச்சர்களிடமிருந்து கடிதம் வந்துள்ளதாக சட்ட மன்றச் செயலாளர் பி.ஓம். பிரகாஷா கூறினார். மூவரும் நோட்டீசுக்குப் பதில் அளித்த பின் ஏழு பேர் கொண்ட சட்டமன்றக்குழு சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் என்று சபாநாயகர் கூறினார். மூவரும் குற்றத்தை ஒப்புக்கொண்ட பின் விசார ணைக்குழு தேவையில்லை என்றும் அவர்களை உடனடி யாக சட்டமன்றத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் காங்கிரசும் மதச் சார்பற்ற ஜனதா தளமும் கூறு கின்றன. முன்னாள் சபாநாயகர் மீது தேர்தல் வழக்கு அலகாபாத், பிப். 13 – உத்தரப்பிரதேச சட்ட மன்ற முன்னாள் சபாநாய கரும் அலகாபாத் தெற்கு சட்டமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளருமான கேச ரிநாத் திரிபாதி மீது தேர்தல் நடத்தை விதி மீறல் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அவருடைய ஆதரவாளர்கள் போக்குவரத்தை தடுத்த போது கண்டித்த காவல்துறை அதிகாரியைத் தாக்கியுள் ளனர். முத்திகன்ஜ் காவல்நிலை யத்தில் புகார் பதிவாகியுள்ளது. காவல்நிலைய பொறுப்பு அதி காரியை தாக்கியவர்கள் அடையாளம் காணப்பட்டு வருகிறார்கள். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர் காவல்துறை கூடுதல் கண் காணிப்பாளர் எஸ்.எஸ்.பாகேல் கூறினார். தேர்தல் கூட்டத் தின் போது சாலையை மறைத் தவர்களை பாதையை மறைக்க வேண்டாமென அவர் கேட் டுக் கொண்ட போது, அவரை பலர் தாக்கியுள்ளனர். பாஜக இதை மறுத்ததுடன், அதிகாரி தான் தேர்தல் கூட்டத்தில் தவறாக நடந்து கொண்டார் என்று கூறியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: