குழந்தை பெற்றுத்தா என்று கணவன் மனைவியைக் கட்டாயப்படுத்த முடியாது பஞ்சாப் – அரியானா உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு சண்டிகார், பிப். 14 – ஒரு கணவன், தன் மனைவியைக் கர்ப்பிணியாக்கி, குழந்தை பெற்றுத்தர வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது, என்று பஞ்சாப் மற்றும் அரி யானா உயர்நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பளித்துள்ளது. கணவன் – மனைவிக்கு இடையேயான உறவுகளுக்கு எல்லையே இல்லை என்றபோதிலும், நெருக்கம் என்பது வேறு, குழந்தை பெற்றுத்தா என்று கட்டாயப்படுத்துவது வேறு என்று உயர்நீதிமன்றம் மேலும் அத்தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. 1994 ஏப்ரலில் திருமணமான இரு தம்பதிகளிடையே மனக்கசப்பு ஏற் பட்டதை அடுத்துப் பிரிந்து வாழ்ந்து வந்தனர். மணமகள் ஜீவனாம்சம் கோரி வழக்கும் தொடுத்துள்ளார். இந் நிலையில் அவர் கர்ப்பிணியாக இருந் ததால், மருத்துவமனை சென்று கருக் கலைப்பும் செய்துள்ளார். இதனை எதிர்த்து கணவர், கரு வைச் சட்டவிரோதமாகக் கலைத்த தால் தனக்கு இழப்பீடு வழங்க வேண் டும் என்று மனைவி மீதும் அவருக்கு உதவியாக இருந்த அவரது சகோதரர், பெற்றோர் மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள் மீதும் சிவில் நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவ் வாறு உரிமை கோர கணவருக்கு உரி மை உண்டு என்று சிவில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக மனை வியும் அவரது உறவினர்களும் மருத்து வர்களும் உயர்நீதிமன்றத்தில் மேல் சீராய்வுமனு தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்ற நீதி பதி ஜிதேந்திரா சௌகான் தனது தீர்ப் பில், குழந்தை பெற் றுக் கொள்வதா, வேண்டாமா என் பது தாயின் சுய விருப்பம். மனைவி தான் தன் கரு வைத் தொடர்ந்து சுமப் பதா அல்லது கலைத்து விடுவதா என் பது தொடர் பாக முடிவு எடுக்கும் சிறந்த நீதிபதியா வார் என்று கூறியுள்ளார். (ந.நி)

Leave A Reply

%d bloggers like this: