மணிப்பூர் காங்கிரஸ் எதிர்ப்புக் கூட்டணியில் திரிணாமுல் சேர ஒப்புதல் இம்பால், பிப். 14- மணிப்பூர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அல்லாத 5 கட் சிகள் சேர்ந்து அமைத்த மக்கள் ஜனநாயக முன்னணியில் (பிடிஎப்) சேர, திரிணாமுல் காங்கிரஸ் கொள்கை ரீதியாக ஒப்புக்கொண்டுள்ளது. கடந்த இரண்டு 5 ஆண்டுகளாக ஆட்சியை நடத்தி வரும் காங்கிரசிடம் இருந்து, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு பிடிஎப் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மக்கள் கட்சித் தலை வரும் (எம்பிபி) மற்றும் பிடிஎப் அமைப்பாளருமான நிமய்சந்த் லுவாங் கூறுகையில், தானும் மற்றும் எம்பிபி தலைவர் தவுனோ ஐமும் மணிப்பூர் மாநிலத்தில் திரி ணாமுல் காங்கிரசுக்கு பொறுப்பு வகிக்கும் முகுல் ராயுடன் விரிவான ஆலோசனை நடத்தினோம். பிடிஎப் கூட்டணி யில் சேருவதற்கான சாத்தியம் குறித்து இந்த ஆலோசனை நடந்தது. ஜனவரி 28ம் தேதி தேர்தலுக்கு முன்னர் பிடிஎப் கூட் டணியில் சேர, திரிணாமுல் மறுத்தது. அந்தக்கட்சி கூட் டணி மாநிலத்தின் 60 தொகுதிகளில் 48 இடங்களில் போட்டியிட்டது. பிடிஎப் அடுத்த அமைச்சரவையை அமைக்கும்பட்சத் தில் திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் பதவி கேட்குமா என்ற கேள்விக்கு பிடிஎப் தலைவர் லுவாங் கூறுகையில், மார்ச் 6ம் தேதி தேர்தல் முடிவுக்குப் பின்னர் இடப்பங்கீடு குறித்து முடிவு செய்யப்படும் என்றார். பிடிஎப் கூட்டணி யில் சேர, பாஜக, சிபிஐ ஏற்னெகவே ஒப்புதல் தந்துள்ளன. பிடிஎப் 5 கட்சி கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் (என் சிபி) எம்.பி.பி., ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், சிபிஎம் ஆகிய கட்சிகள் 2010 டிசம்பர் 3 அன்று அடுத்த அமைச்சரவை அமைக்க ஒப்புக்கொண்டுள்ளன.

Leave A Reply