பரூவாவின் மனைவி, குழந்தைகள் இந்தியா திரும்பிவர சம்மதம் குவாஹாத்தி: உல்பா தீவிரவாத அமைப்பின் தலைவரான பரேஷ் பரூவா வின் மனைவியும் குழந்தைகளும் இந்தியா விற்குத் திரும்பி வர சம்மதம் தெரிவித் துள்ளனர். ஆனால் அவர்களை வரவிடா மல் பரூவா தடை செய்கிறார் என்று முன் னாள் மத்திய உள்துறை செயலர் ஜி.கே. பிள்ளை தெரிவித்தார். பரூவாவின் குழந்தைகளுக்கு தாய் மொழி தெரியாது என பத்திரிகையாளர் களிடம் தெரிவித்தார். பரூவாவின் முன் இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, வன்முறையைக் கைவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது. மற்றொன்று, பாதுகாப்புப் படையினரால் அழிக்கப்படுவது. வரும் ஆண்டுகளில் அவர் தனிமைப்படுத்தப்படுவார் என்று பிள்ளை தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: