பணவீக்க விகிதம் கடுமையாகிறது: பிரணாப் ‘வேதனை’ புதுதில்லி, பிப். 14- நாட்டின் பணவீக்க விகிதம், ஜனவரி மாதம் 6.55 சதவீதமாக குறைந்துள்ளது. இது 25 மாதத் திற்கு முந்தைய நிலையில் இருந்த பணவீக்க விகிதம் ஆகும். இந்த பண வீக்க விகிதம், ஏற்கக்கூடிய தாக இல்லை என நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, செவ்வாய்க்கிழமை கூறினார். ஜனவரி மாதத்திற்கான பண வீக்க விகித விவரத்தை செவ் வாய்க்கிழமை அரசு வெளியிட்ட போது, 2 ஆண்டுகளுக்கு முந் தைய பணவீக்க நிலையாக 6.55 சதவீதமாக குறைந்திருந்தது. ஒட்டுமொத்த விற்பனை விலை உள்ளடக்க பட்டியல் அடிப் படையில், தற்போது மாதம் ஒரு முறை பணவீக்க விகித விவரம் வெளியிடப்படுகிறது. கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் பணவீக்க விகிதம் 7.15 சதவீதமாக இருந்தது. அந்த நிலையை விட, குறைவாக 6.55 சதவீத நிலையை தற்போது எட்டியுள்ளது. பணவீக்க விகித விவரம் குறித்து பிரணாப் முகர்ஜி கூறு கையில், தற்போதைய பணவீக்க விகிதம் ஏற்புடையதாக இல்லை. இந்த விகிதம் மேலும் குறைய வேண்டும் என்றார். கடந்த டிசம் பர் மாதம் மைனஸ் 0.74 சதவீத மாக இருந்த உணவுப் பொருள் விலை உயர்வு, ஜனவரி மாதம் மைனஸ் 0.52 சதவீதமாக இருந்தது. காய்கறிகள் 43.13 சதவீதம் மலிவானதாக விற்பனை ஆனது. கோதுமை ஆண்டு அடிப்படை யில் 3.48 சதவீதம் விலை குறைந் திருந்தது. உருளைக்கிழங்கு 23.15 சதவீதமும், வெங்காயம் 75.57 சதவீதமும் விலை குறைந்திருந் தது. ஒட்டுமொத்த விலைப் பட்டியலில் உணவுப்பொருட் கள் 14.3 சதவீதம் இடம்பெற்றுள் ளன. உற்பத்திப் பொருட்கள் ஆண்டு அடிப்படையில் 7.41 சத வீதம் அதிகரித்திருந்தன. 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உற்பத்தி பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின் றன. அப்போது உற்பத் திப் பொருள் 6 சதவீதத்தை கடந் திருந்தது. இரும்பு பொருட்கள் 18.46 சதவீதம் அதி கரித்துள்ளன. சமையல் எண்ணெய் விலை 9.59 சதவீதம் அதிகரித்துள்ளன.

Leave A Reply

%d bloggers like this: