நாமக்கல்லில் விவசாயிகள் மறியல் – கைது நாமக்கல், பிப். 14- கரும்பு டன்னுக்கு ரூ. 3000- விலை நிர்ணயம் செய்யக் கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். தமிழக அரசு கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3000 விலை நிர்ணயம் செய்ய வேண்டும். வெட்டுக்கூலியை ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும். கரும்பையும், சர்க்கரையையும் எடை போட ஆலைக்கு ஒரே எடை மேடை இருக்க வேண்டும் என வலியு றுத்தி பொன்னி சர்க்கரை ஆலை மற்றும் மோகனூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட் டனர். இம்மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் எ.முத்துசாமி தலைமை வகித்தார். இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்கத் தலைவர் பி.கே.தெய்வசிகாமணி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.பெருமாள் சிறப்புரையாற்றினார். கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் செ.நல்லாக்கவுண்டர், பொருளாளர் இ.முத்துசாமி, விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் எ.ஆதிநாராயணன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சி.துரைசாமி, பொருளாளர் ப.ராமசாமி, தங்கமணி, லிங்கப்பகவுண்டர், எம்.செங்கோட்டை யன், பொன்னுசாமி, பூபதி, கே.தேவராஜ் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் மறியலில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: