நான் சிரிக்கப் பிறந்தவன்…! விவசாயிகளிடம் வசனம் பேசிய முதல்வர் பல்வேறு கோரிக் கைகளை முன் வைத்து கர்நாடகத் தில் விவசாயிகள் போராடி வருகிறார் கள். பெங்களூரில் உள்ள விடுதலைப் பூங்காவில் தொடர்ந்து தர்ணா நடத்தி வருகி றார்கள் விவசாயிகள். அவர்களின் இந்தப்போராட்டம் மாநிலம் முழுவதும் விரிவடையும் வாய்ப்பு இருப்பதால் விடுதலைப் பூங்காவிற்கு விரைந்தார் பாஜக முதலமைச்சர் சதானந்த கவுடா. அங்கு கூடியிருந்த விவசாயிகளைச் சந்தித்தபோது சிரித்த முகமாகவே காட்சியளித்துக் கொண்டிருந்தார். அப்போது விவசாயிகளின் தலைவர்களில் ஒருவரான புட்டனய்யா எழுந்து, “நீங்கள் ஒருவர் மட்டுமே புன்னகைப்பவராகவும், சிரிப்பவராகவும் இருக்கக்கூடாது. மற்றவர்களும் புன்னகைக்கவும், சிரிக்கவும் செய்ய வேண்டும்” என்றார். சுதாரித்துக் கொண்டதாகக் காட்டிக்கொண்ட சதானந்த கவுடா, நான் மட்டுமே சிரித்து, மற்றவர்கள் எல்லாம் சிரிக்காமல் இருக்க வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. நான் சிரிக்கப் பிறந்தவன். யாரும் அதைத் தவறாகச் சித்தரிக்கக்கூடாது என்றார். இதுபற்றி விளக்கம் கொடுக்க புட்டனய்யா எழுந்தபோது, சிரிப்பதற்காகவே பிறந்த சதானந்த கவுடாவின் முகம் சிவந்து போனது. முகத்தில் இருந்த புன்னகை, சிரிப்பு எல்லாம் மாயமாக மறைந்தது. கடு கடுவென்று முகத்தை வைத்துக் கொண்டு, இதுபோன்ற பேச்சுக்களை எல்லாம் நான் சகித்துக் கொள்ள மாட்டேன் என்றார். விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியதால் கோபத்துடன் இடத்தைக் காலி செய்ய முயன்றார். இதற்கிடையில், விவசாயிகளுக்கு அருகில் நிரந்தர வேலை மற்றும் ஊதிய உயர்வு ஆகிய கோரிக்கைகளை வைத்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள். முதல்வர் வந்திருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்ட அவர்கள் அவரைப் பார்க்கலாம் என்று வந்தனர். அதைப்பார்த்தவுடன் ஓட்டப்பந்தய வீரராக மாறினார் சதானந்த கவுடா. மின்னல் வேகத்தில் காருக்குள் ஓடிப்போய் உட்கார்ந்து கொண்டார். கார் விரைந்தது.

Leave a Reply

You must be logged in to post a comment.