44வது இந்திய தொழிலாளர் மாநாடு துவங்கியது திறன்மிக்க இளைஞர்கள் இந்தியாவில் இல்லை பிரதமர் புதுத்தகவல் புதுதில்லி, பிப்.14- இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது தமது அரசின் முதன்மைப் பணியாக இருந்தபோதும் இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கான கட்ட மைப்பு எதிர்பார்த்ததைவிட மந்தமாக உள்ளது என பிரதமர் மன்மோகன்சிங் கூறினார். தலைநகர் தில்லியில் 44வது இந்தியத் தொழிலா ளர் மாநாடு செவ்வாய்க் கிழமை துவங்கியது. இந்த மாநாட்டில் துவக் கவுரையாற்றிய பிரதமர் மன் மோகன்சிங், இளைஞர்க ளின் திறன் மேம்பாட்டு அவசியத்தை வலியுறுத்தி னார். “இந்தியப் பொருளா தாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் பணியாளர் தேவையை பூர்த்திசெய்ய இளைஞர் களை திறன் மிக்கவர்களாக உருவாக்கவேண்டியுள்ளது. 2004ம் ஆண்டு முதல் இந் தியப் பொருளாதார வளர்ச்சி, மிக வேகமாக வளர்ந்துவருகிறது. இந்த வளர்ச்சி நிலை யில் நாட்டின் திறன் மேம் பாட்டு கட்டமைப்பு நட வடிக்கையில் குறைபாடு இருப்பது தெளிவாகவே தெரிகிறது. தொழில்துறை வளர்ச்சிக்கு மிக முக்கியத் தேவையாக திறன் வாய்ந்த இளைஞர்கள் உள்ளனர். தற்போது பற்றாக்குறை நிலவுகிறது என்று பிரதமர் கூறினார். இளைஞர்களின் திறன் மேம்பாட்டு கட்டமைப்புத் திறனை உருவாக்குவதில் தனியார் துறையினர் தாங்க ளாக, தங்களை தீவிரமாக இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் தனது உள்ளக்கிடக்கையை தெளி வாக வெளியிட்ட பிரதமர், தனியார் பங்கேற்பு மூலம் அதிக வேலைவாய்ப்பு களை உருவாக்க வேண்டும் என்பதில், அரசு உறுதி கொண்டுள்ளது என்றார். சிஐடியு பிரதிநிதிகள் புதனன்றும் தொடர்ந்து நடைபெறவுள்ள இம் மாநாட்டில் நாட்டின் பல் வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் தலைவர்கள் பங் கேற்றுள்ளனர். இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் அகில இந்திய தலைவர் ஏ.கே.பத்ம நாபன், பொதுச் செயலாளர் தபன்சென் எம்.பி., அகில இந்திய செயலாளர்கள் டாக்டர் கே.ஹேமலதா, ஸ்வதேஷ் தேவ் ராய் ஆகி யோர் பங்கேற்றுள்ளனர். நாடு முழுவதும் நிலவி வரும் தொழில்துறை மந்த நிலைமை மற்றும் தொழி லாளர்களின் நிலைமை குறித்த பல்வேறு விபரங்கள் அடங்கிய குறிப்புகளையும், இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண அரசு மேற் கொள்ள வேண்டிய ஆலோசனைக ளையும் இம்மாநாட்டில் சிஐடியு சமர்ப்பிக்கிறது.

Leave A Reply