போர் வெறியும் கார் எரிப்பும் தலைநகர் தில்லியில் பிரதமர் இல்லத்தில் இருந்து வெறும் 200 மீட்டர் தொலைவில், பாது காப்புமிக்க ஒளரங்கசீப் சாலையில் அமைந் துள்ளது இஸ்ரேலியத் தூதரகம். இத்தூதரக அலுவலகத்திற்கு அருகில், தூத ரக அதிகாரி ஒருவரின் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. திங்களன்று மாலை நடந்த இச் சம்பவம் ஒரு உலகப் பெரும் பயங்கரவாதத் தாக்குதலாக இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய அரசு களாலும் கார்ப்பரேட் ஊடகங்களாலும் சித்தரிக் கப்பட்டுள்ளன. இஸ்ரேலியத் தூதரக அதிகாரியின் காரை இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்ததாகவும், சிக்னலில் நின்றபோது காரின் பின்புறத்தில் ஏதோ ஒரு பொருளை ஒட்டிவிட்டுச் சென்றுவிட்டதாகவும், அடுத்த சில நிமிடங்களில் அப்பொருள் வெடித்து கார் தீப் பற்றியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்த விசாரணை நடந்த பிறகே இது தாக்குதலா, தற்செயல் விபத்தா என்ற முடிவுக்கு வர முடியும். ஆனால், சம்பவம் நடந்த அடுத்த சில நிமிடங்களிலேயே, இதற்காகவே காத்தி ருந்தது போலவே, “இது ஈரானின் சதி; உலகம் முழுவதும் ஈரான் இதுபோன்ற பெரும் பயங்கர வாதச் செயல்களை ஏற்றுமதி செய்துகொண்டி ருக்கிறது” என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அறிக்கை வெளியிட்டார். இதேபோன்ற சம்பவம், ஜார்ஜியாவின் தலை நகர் டிபிலிசியிலும் நடந்துள்ளது என்று கூறிய அவர், “ எனவே தான் சொல்கிறோம், ஈரானை உடனே தாக்க வேண்டும்” என்று போர் முழக் கம் செய்துள்ளார். இதிலிருந்தே விஷயத்தைப் பளிச்சென்று புரிந்துகொள்ளலாம். பொருளாதார நெருக்கடி தீவிரமடையத் தீவிரமடைய, அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், அதன் கைக்கூலியான இஸ்ரேலையும் போர் வெறி உச்சத்திற்கு ஏறி ஆட்டிக்கொண்டிருக் கிறது. இஸ்ரேலை ஏவி, ஈரானைத் தாக்கி, ஒரு பெரும் போரை நடத்தி, தத்தளிக்கும் முதலாளித் துவத்தை போரால் தக்கவைத்துக்கொள்ள எத் தனிக்கிறது ஒபாமா நிர்வாகம். ஈரான் மீதான போருக்கு உலகோரின் மன நிலையைத் தயார்ப்படுத்தும் பணி ஊடகங் களுக்கு. உண்மையில், ஈரானிலேயே தில்லியில் நடந்தது போன்ற கார் எரிப்புச் சம்பவங்கள் கடந்த 2 ஆண்டுகளில் 4 முறை நடந்துள்ளன. இவற்றில் ஈரானின் மிக முக்கிய 3 அணு விஞ் ஞானிகள் கொல்லப்பட்டனர். 2011 நவம்பரில் ஈரான் ஏவுகணைத் திட்டத்தின் தலைவரும் மூத்த விஞ்ஞானியுமான மேஜர் ஜெனரல் ஹசன் மொசாதம் படுகொலை செய்யப்பட்டார். இவற்றை நடத்தியது, ஈரானுக்குள் செயல்படும் இஸ்ரேலின் உளவு ஸ்தாபனமான “மொசாத்” தின் ரகசிய ஏஜெண்டுகளே. தனது விஞ்ஞானிகளை இழந்த ஈரான், ஒரு போதும் இஸ்ரேல் மீது போர் முழக்கம் செய்ய வில்லை. மறுபுறத்தில், இஸ்ரேலியத் தூதரக கார் எரிப்புச் சம்பவங்களில் இதுவரை இஸ்ரேலைச் சேர்ந்த ஒருவர்கூட பலியாகவில்லை. இதை எப்படிப் புரிந்துகொள்வது? ஆர்எஸ் எஸ்காரர்கள் ஆங்காங்கே கோவில்களில் குண்டுவைத்துவிட்டு முஸ்லிம்கள் மீது பழி சுமத்தியதைப் போல, தங்களது ரகசிய ஏஜெண்டை வைத்தே தங்கள் காரை எரித்து விட்டு, ஈரான் மீது பழிபோடுகிற இஸ்ரேலின் கைங்கர்யம் என்றுகூடப் புரிந்து கொள்ளலாம்.

Leave A Reply