தமிழகத்தை வாட்டும் மின்வெட்டு திமுக, அதிமுக அரசுகளே காரணம் ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு மதுரை, பிப்.14- கடந்த பத்தாண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் புதிய மின்திட்டங் களை மேற்கொள்ளாததன் விளைவே தற் போதைய கடும் மின்வெட்டுக்கான காரணம் என மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு தமிழக அரசு 100 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் சார்பில் முனிச் சாலை ஓபுளாபடித்துறையில் செவ்வாயன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தைத் துவக்கி வைக்க மதுரை வந்திருந்த ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் அரசு இராசாசி மருத்துவம னையின் அடிப்படைக் கட்டமைப்பை மேம் படுத்த, கருவிகள் வாங்க, போதுமான மருத் துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் நியமித் திட தமிழக அரசு 100 கோடி ரூபாய் ஒதுக் கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி நடைபெறும் உண்ணாவிரதப்போராட்டத் தைக் கட்சியின் மாநிலக்குழுப் பாராட்டு கிறது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமி ழக அரசு நிதி ஒதுக்கி இம்மருத்துவமனை யின் கட்டமைப்பை உயர்த்த வேண்டும். கடும் மின்வெட்டு தமிழ்நாட்டு மக்கள் கடுமையான மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு அறிவித்த நேரத்தைவிட மின்வெட்டு கூடு தலாக அமல்படுத்தப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுதொழில் முனை வோர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் தன்னெழுச்சியாக போராடி வருகின்றனர். தமிழக அரசு, மத்திய மின்தொகுப்பில் இருந்து போதுமான மின்சாரத்தை வாங்கி, மின்வெட் டைத் தடுத்திட வேண்டும். 8 மணிநேரம் முதல் 10 மணி நேரம் வரை மின்வெட்டு நடைபெறுவதால், நிதிஆண்டில் பொருளா தார வளர்ச்சியின் இலக்கு கடுமையாகப் பாதிக்கப்படும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பொது மக்களிடம் கருத்துக்கேட்டுள்ளது. அனைத் துப்பகுதி மக்களும் மின்கட்டணத்தை எக் காரணம் கொண்டும் உயர்த்தக்கூடாது என வலியுறுத்தியுள்ளனர். மின்கட்டண உயர்வு என்ற முடிவை அரசு கைவிட வேண்டும் என ஆணையத்திடம் மார்க்சி°ட் கம்யூ னி°ட் கட்சி சார்பில் வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக, திமுக ஆட்சிகளில் புதிய மின்திட்டங்கள் உருவாக் கப்படவில்லை. மின்தேவை என்பது அன் றாடம் கூடுதலாகி வரும் நிலையில், மின் தேவைக்கேற்ப அரசிடம் திட்டம் இல் லை. இதன்காரணமாகவே மின்தட்டுப்பாடு கடுமையாக நிலவி வருகிறது. தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அனல் மின்நிலையங்களில் பழுது ஏற்பட் டதை சரிசெய்ய நடவடிக்கைத்தேவை. தனியார் மின்நிலையங்கள் 1 யூனிட் மின்சாரத்திற்கு 15 ரூபாய் முதல் 17 ரூபாய் வரை அரசிடம் வசூல் செய்கின்றன. ஆனால் அரசோ, பன்னாட்டு, உள்நாட்டு பெருமுத லாளிகளுக்கு 1 யூனிட் மின்சாரத்தை 4 ரூபாய் 50 பைசாவிற்கு தடையில்லாமல் வினியோகம் செய்கிறது. இதனால் மாநில அரசுக்கு பெரிய அளவு நஷ்டம் ஏற் படுகிறது. கடந்த 1 ஆண்டு மட்டும் பன் னாட்டு, உள்நாட்டு பெருமுதலாளிகளுக்கு அளிக்கப்படும் மின்சாரத்திற்கு 18 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் 9 ஆயிரம் கோடி ரூபாய் தான் மின் கட்டணமாகச் செலுத்தியுள் ளனர். இதனால் தமிழக அரசுக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங் குவதை மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி வரவேற்கிறது. கடந்த இரண்டு ஆண்டுக ளாக இலவச மின்சாரத் திற்கான தொகை யான 9 ஆயிரம் கோடி ரூபாயை மின்வாரியத் திற்கு தமிழக அரசு தர வில்லை.கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை பன்னாட்டு, உள்நாட்டு பெருமுதலாளி களுக்கு 21 இலட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு வரிச்சலுகை செய்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில், பெருமுத லாளிகளுக்கு சலுகை விலையில் மின் சாரம் வழங்கிவிட்டு, அந்த சுமையை சாதா ரண மக்கள் தலையில் தமிழக அரசு சுமத் தப்பார்க்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக புதிய மின்திட்டங்களை உருவாக்காமல் அதிமுக, திமுக அரசுகள் செய்த தவறுக்கு மக்களைத் தண்டிக்கக்கூடாது. இதுகுறித்தும் ஒழுங்கு முறை ஆணையத்திடம் மார்க்சி°ட் கம்யூ னி°ட் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். (ந.நி.)

Leave A Reply

%d bloggers like this: