சோமாலியா பட்டினியால் 29 குழந்தைகள் மரணம் மொகாடிசு, பிப்.14 – சோமாலியாவின் கரான் மாவட்டத்தில் உள்ள சேலிசி அகதிகள் முகாமில் தங்கி யிருந்த குழந்தைகளில் 29 பேர் பட்டினியால் உயிரிழந்துள் ளனர். பிப்ரவரி 3 ஆம் தேதியன்று தான் சோமாலியாவில் பஞ்சம் முடிவுக்கு வந்துவிட்டது என்று அறிவித்தது. ஆனால் அதன் அதிகாரிகள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள். சோமாலியாவில் ஐக்கிய நாடுகள் சபையின் பணிகளை ஒருங்கிணைந்து வரும் மார்க் போடென், 2 லட்சத்து 50 ஆயிரம் குடும்பங்கள் குடியி ருக்க இடம், உணவு, மருந்து மற்றும் பல்வேறு மனிதாபிமான உதவிகளுக்காகக் காத்திருக் கின்றன என்கிறார். மேலும் பல அதிகாரிகள் கூறுகையில், வரும் மே மாதத் திற்குள் இந்த எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கப்போ கிறது என்கிறார்கள். இந்நிலை யில்தான் முகாமில் இருந்த குழந்தைகளில் 29 பேர் பட்டி னியால் உயிரிழந்த செய்தி வெளியாகியுள்ளது. மேலும் உடனுக்குடன் அடுத்தவர்க ளுக்குப் பரவும் நோய்கள், பஞ் சத்தால் பாதிக்கப்பட்ட பகுதி களில் அதிகரித்துள்ளன. வரும் நாட்களில் தெற்கு சோமாலியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் பஞ்சம் பரவி விடும் என்று ஐ.நா. எச்சரித் துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந் தைகள் 30 ஆயிரம் பேர் வயிற் றுப்போக்கு காரணமாக உயிரி ழந்துள்ளனர். காலராவும் பரவி யுள்ளது. சோமாலியாவின் தென்பகுதியில் மட்டும் 30 லட்சம் மக்கள் கடுமையான பட்டினியால் பாதிக்கப்படப் போகிறார்கள். சோமாலியாவில் மட்டுமல்ல, இந்தப் பிராந்தியத் தில் உள்ள எத்தியோப்பியா, ஜிபோட்டி, கென்யா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளும் எப்போதும் இல்லாத அள வுக்குக் கடுமையான பஞ்சத் தால் பாதிக்கப்பட்டுள்ளன. சோமாலியாவையும் சேர்த்து சுமார் 1 கோடியே 24 லட்சம் மக்கள் பஞ்சம், பட்டினி போன்ற கொடுமைகளால் அவதிப்படுகிறார்கள். 1991 ஆம் ஆண்டிலிருந்து செயலாற்றும் அரசு சோமாலி யாவில் பொறுப்பேற்கவில்லை. அப்போது ஆட்சியிலிருந்த சர்வாதிகாரி முகமது சியாத் பர்ரேயின் ஆட்சியை பல்வேறு குழுக்கள் இணைந்து பொறுப் பிலிருந்து அகற்றின. அதன் பின்னர், எந்தவொரு ஆட்சியும் அங்கு முறையாக நடைபெற வில்லை. இந்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு அங் குள்ள தனது ராணுவத்தளங் களை அமெரிக்கா பலப்படுத் திக் கொண்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.