செய்தித்துளிகள்… இ°ரேலிய ராணுவத்தில் பணிபுரியும் அந்நிய நாட்ட வர்களின் பா°போர்ட்டை வைத்துக் கொண்டு இ°ரேலின் உளவு அமைப்பான மொசாத் பல்வேறு சதிவேலைகளை வெளிநாடுகளில் செய்து வருகிறது. ‘டைம்° ஆப் லண்டன்’ என்ற இதழில் இது குறித்த ஆய்வறிக்கை ஒன்று வெளியாகி யுள்ளது. தங்களின் சதி வேலைகளுக்காகக் குறிப்பாக பிரிட்டன் மற்றும் பிரான்° நாட்டைச் சேர்ந்தவர்களின் பா° போர்ட்டைத்தான் அவர்கள் பயன்படுத்திக் கொண் டிருக்கிறார்கள். * * * நீதிமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்த பிரிட்டன் தொழிலாளர்கள் திட்டமிட்டுள்ளனர். அரசு கொண்டு வரும் ஓய்வூதியச் சீர்திருத்தத்தை நீதித்துறை பரிசீலனை செய்ய வேண்டும் என்று தொழிற்சங்கங்களின் கோரிக்கையை நிராகரித்ததால்தான் இந்த முடிவை எடுத்துள்ளனர். ஓய் வூதியத்தை அதிகரிப்பதற்கு சில்லரை விலைப்பட்டியலை அடிப்படையாகக் கொண்டு இவ்வளவு நாட்கள் நிர்ண யித்தனர். இனிமேல் நுகர்வோர் விலைப்பட்டியலைக் கொண்டு நிர்ணயிக்கும் அரசு முடிவுக்கு தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். * * * டிசம்பர் 2010ல் வெனிசுலாவில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடு களை இழந்தனர். தலைநகர் காரகாஸின் நெடுஞ்சாலை களுக்கு அருகில் முகாம்கள் அமைக்கப்பட்டு அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சில முகாம்களில் உள்ளவர் கள் தங்கள் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண வேண் டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். உடனடியாக அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அரசு, இந்தப் பிரச்ச னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித் திருக்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.