சீன இளைஞர் குழு இந்தியா வருகிறது பெய்ஜிங், பிப். 14- சீன-இந்திய மக்களி டையே உள்ள தொடர்பை மேம்படுத்தும் விதமாக, சீனாவின் 500 இளைஞர்கள் பிப்ரவரி 23ம் தேதியன்று தலைநகர் தில்லிக்கு வருகி றார்கள். சீனாவில் இருந்து மிக அதிகபட்சமாக வரும் ஒரு குழுவாக இந்த சீன இளைஞர்கள் குழு உள் ளது. சீன இளைஞர்கள் இந் தியா வருவது குறித்து அந்த நாட்டின் தலைநகர் பெய் ஜிங்கில் இந்திய துணைத் தூதர் ராகுல் சந்த்ரா கூறு கையில், இந்தியாவுக்கு செல் லும் மிகப்பெரிய சீனக்குழு இதுவாகும். அவர்களது பய ணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்றார். சீன இளைஞர்களின் இந்தியப் பயணத்திற்கு இரு நாடுகளும் ஏற்பாடு செய் துள்ளன. இரு நாட்டு மக் கள் தொடர்பு மேம்படுவ தற்காக இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. 9 நாள் பயணமாக சீனாவின் வெவ்வேறு பகுதி களைச் சேர்ந்த இளைஞர் கள் தில்லியில் ஒன்று கூடு கிறார்கள். பின்னர் அவர்கள் 4 குழுக்களாக மும்பை, பெங்களூர், கொல்கத்தா, ராஜஸ்தானுக்கு பிரிந்து செல்கிறார்கள். கடந்த ஆண்டு 500 இந்திய இளை ஞர்கள் குழு சீனாவுக்கு பயணம் மேற்கொண்டது. அப்போது அவர்களுக்கு சீன பிரதமர் வென்ஜியா பவ் விருந்து அளித்து சிறப்பித் தார். தலைசிறந்த மக்கள் கூடத்தில், இந்த விருந்து அளிக்கப்பட்டது. அந்த விருந்து நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய வென்ஜியா பவ் பின்னர், மரபு முறைகளை தவிர்த்து இந்தியக்குழுவு டன் சுதந்திரமாகப் பேசி னார். பாலிவுட் இசை, அரங் கில் நிறைந்தது. சில இளை ஞர்கள் வென்ஜியா பவ் வுக்கு நேரு குல்லாவை அணிவித்து மகிழ்ந்தனர். அந்தக் குழுவின் பயணத் தை பிரதிபலிக்கும் வகை யில், சீனக் குழு இந்த ஆண்டு இந்தியா வருகிறது. சீனாவின் பல்வேறு மாகா ணங்களில் இருந்து இந்தியா வரும் இளைஞர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அந் தக்குழுவினருக்கு என்எஸ் எஸ், நேரு யுவகேந்திரா இந் திய விளையாட்டு ஆணை யகம், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா நிறுவனம் ஆகியவை விருந்து அளிக்கின்றன.

Leave A Reply

%d bloggers like this: