சந்தேகம் சாமிக்கண்ணு ரூ.650 கோடியில் தோஷிபா ஜெனரேட்டர் தொழிற்சாலை – முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். ச.சா – இந்தத் தொழிற்சாலை உற்பத்தி செய்து, அந்த ஜென ரேட்டர்லாம் விற்பனையாகுற வரைக்கும் மின்வெட்டு இருக்கு மோ…?? * * * இ°லாமிய மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பேன் – மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித். ச.சா – உ.பி.தேர்தல் முடிஞ்சவுடன, நாடு முழுக்கக் குரல் கொடுப்பீங்களா…?? * * * உள்ளாட்சித் தேர்தலில் 90 விழுக்காடு வெற்றிபெறவைத்த முதல் வருக்கு, நன்றிக்கடனாக நாடாளுமன்றத் தேர்தலில் பணியாற்றி அவரை பிரதமராக்குவோம் – அண்ணா தொழிற்சங்க செயலாளர் சின்னச்சாமி. ச.சா – ஓட்டுப்போட்ட மக்கள் ஓட்டாண்டிகளாவதா..?? * * * போர்ப்படைத்தளபதியின் வயது விவகாரத்தை நான்கு சுவர்களுக் குள் தீர்த்திருக்கலாம் – பாஜக செய்தித்தொடர்பாளர் முக்தர் அப்பா° நக்வி. ச.சா – உங்க ஆட்சில கடற்படைத்தளபதி விஷ்ணு பகவத்த பதவியிலிருந்தே நீக்குனீங்களே… அத நீங்க சொல்ற மாதிரி தீர்த்துருக்கலாமே…??

Leave a Reply

You must be logged in to post a comment.