கோவையில் காஸா கிராண்டே கோவை, பிப். 14- சென்னையின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவங்களில் ஒன்றான காஸா கிராண்டே அடுத்ததாக கோவை மாநகரில் அடியெடுத்து வைக்கிறது. இதுகுறித்து காஸா கிராண்டே நிர்வாக இயக்குநர் அருண்குமார் மற்றும் நிர்வாக பங்குதாரர் செந்தில்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளதாவது, கோவை நகரில் வில்லாஸ் மற்றும் வரிசை வீடுகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இவற்றின் தேவைகள் மக்கள் மத்தியில் பெருகியுள்ளது. கோவை அவினாசி சாலையில், 5 ஏக்கர் நிலப்பரப்பில் டிசைனர் லக்ஸரி என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒரு வீட்டின் விலை 50 லட்சம் முதல் 70 லட்சம் வரை விற்பனை செய்யப்படும்.

Leave a Reply

You must be logged in to post a comment.