கோவையில் இன்று சிபிஎம் தர்ணா கோவை, பிப். 14- மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட 20-வது மாநாடு நிறைவேற்றிய தீர்மானங்களை வலியுறுத்தி இன்று கோவையில் பெருந்திரள் தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது. கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் எதிரில் இன்று (புதனன்று) மாலை 4 மணிமுதல் 8 மணிவரை நடைபெற உள்ள போராட்டத்திற்கு சிபிஎம் கோவை மாவட்டச் செயலாளர் வி. இராமமூர்த்தி தலைமை ஏற்கிறார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் கோவை நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆர்.நடராஜன் போராட்டத்தை துவக்கி வைத்துப் பேசுகிறார். மாநிலக்குழு உறுப்பினர் கே.சி. கருணாகரன் நிறைவுரையாற்றுகிறார். கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுபினர்கள் யு.கே.வெள்ளிங்கிரி, சி.பத்மநாபன், யு.கே. சிவஞானம், எஸ்.கருப்பையா, எஸ். ஆறுமுகம் உள்ளிட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்களும்,இடைக்குழுச் செயலாளர்களும் பங்கேற்க உள்ளனர்.தமிழகத்தில் நிலவும் கடும் மின்வெட்டை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். தொழில்துறையினருக்கு மின்வெட்டிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். அரசுப் புறம்போக்கு நிலங்களில் குடியிருந்துவரும் பொது மக்களுக்கு வீட்டுமனைப்பட்டாவழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: