கேரளா, உ.பி. சாம்பியன்கள் உத்தரப்பிரதேச ஆடவர் அணியும் கேரள மகளிர் அணியும் தேசிய இளையோர் வாலிபால் சாம்பியன் பட்டங்களை தக்க வைத்துக்கொண்டன. 20 வயதுக்கு உட்பட்டோருக்கான 14வது தேசிய இளையோர் வாலிபால் போட்டிகள் கொல்கத்தாவில் நடைபெற்று முடிந்தன. ஆடவர் இறுதி ஆட்டத்தில் கேரளா முதல் ஆட்டத்தை 25-15 என வென்றது. அதற்கடுத்த மூன்று செட்டுகளையும் உத்தரப்பிரதேச அணி வென்றது. உத்தரப்பிர தேசம் 3-1 என்ற ஆட்டக்கணக்கில் வென்றது. ஆடவர் இறுதி ஆட்டம் 95 நிமிடங் களில் முடிந்தது. மகளிர் இறுதி ஆட்டத்தில் மேற்கு வங்கமும் கேரளாவும் மோதின. கேரளம் 25-12, 25-20, 25-16 என்ற செட் புள்ளிகளில் 51 நிமிடத்தில் ஆட்டத்தை வென்றது. மகளிர் சாம்பியன் பட்டத்தைத் தொடர்ந்து நான்காவது முறையாகத் தக்க வைத்துக்கொண்டுள்ள கேரளம் இதுவரை 12 முறை மகளிர் பட்டத்தை வென்றுள்ளது. மூன்றாவது இடத்தை ஆடவரில் தமிழகமும் மகளிரில் ஹரியானாவும் கைப்பற்றின.

Leave A Reply