கூடங்குளம் கலாம் ஆலோசனையை அரசு பரிசீலிக்க வேண்டும் ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை ஜப்பான் புகுஷிமாவில் ஏற்பட்ட பாதிப்பையடுத்து அணுமின்நிலையம் குறித்து மக்கள் அச்சப்படுகிறார்கள். கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ளது விவிஆர் டைப் அணு உலையாகும். ஐரோப்பா நாடுகளில் இப்படிப்பட்ட அணு மின்நிலையங்கள் இயங்கி வருகிறது.கூடங்குளத்தில் உள்ள மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என ஏற்கனவே, மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி வலியுறுத்தி யிருந்தது. மத்திய நிபுணர்குழு, கூடங்குளத்தை ஆய்வு செய்து, அச்சம் தேவையில்லை என அறிக்கை சமர்ப்பித் துள்ளனர். தற்போது தமிழக அரசும், ஒரு குழு அமைத்துள் ளது. அந்தக்குழு ஆய்வு செய்து, கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயக்கலாம் என அறிவித்தால் உற்பத் தியைத் துவக்கலாம். முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம், கூடங்குளத்தை ஆய்வு செய்து விட்டு ஆபத்தில்லை என்று கூறியதுடன், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 200 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்யவேண்டும் எனக்கூறியுள்ளார். இக்கோரிக்கையை மத்திய அரசு பரி சீலிக்க வேண்டும். (மதுரை பேட்டியில் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்)

Leave A Reply

%d bloggers like this: