குறைந்தபட்ச ஊதிய அரசாணையை வெளியிடுக! சென்னையில் பீடித் தொழிலாளர்கள் பேரணி சென்னை, பிப். 14 – குறைந்தபட்ச ஊதியத் திற்கான இறுதி அரசாணையை வெளியிட வலியுறுத்தி, பீடித் தொழிலாளர்கள் சென்னை யில் பேரணி நடத்தினர். இதுபற்றிய விவரம் வரு மாறு:- தமிழகத்தில் பீடித் தொழிலில் லட்சக்கணக் கான தொழிலாளர்கள் ஈடு பட்டுள்ளனர். இத்தொழி லாளர்களுக்கு அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப் படி உயர்வு குறித்து முத்த ரப்பு ஒப்பந்தம் 2010 அக் டோபர் மாதம் தொழிலா ளர் நல ஆணையர் முன்னி லையில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, 2011 பிப்ரவரி மாதம் அரசித ழில், முதனிலை அறிக்கை வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2 மாதத் திற்கு பிறகு இறுதி அறி விக்கை வெளியிட்டிருக்க வேண்டும். இதற்குள்ளாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக அரசு பொறுப் பேற்றது. அதிமுக அரசு பொறுப்பேற்று 9 மாதமா கியும் இறுதி அரசாணை வெளியிடப்படவில்லை. இதனால் ஒவ்வொரு தொழிலாளரும் அடிப் படைச்சம்பளம், பஞ்சப் படி, விடுமுறை ஊதியம், போனஸ், வருங்கால வைப்பு நிதி உட்பட நாளொன் றுக்கு 28 ரூபாய் வீதம் சுமார் 1.50 கோடி ரூபாய் இழந்துள்ளனர். தமிழக அரசு இறுதி அரசாணை யை வெளியிடாமல் முத லாளிகளுக்கு பல நூறு கோடி ரூபாய் லாபம் கிடைக்க வழிவகை செய் துள்ளது. இதனைக் கண்டித்தும், கிராமப்புற ஏழை, எளிய பீடித்தொழிலாளர்களின் ஊதிய உயர்வை உடனடி யாக அமல்படுத்த இறுதி அரசாணையை வெளியிட வலியுறுத்தியும் தமிழ்நாடு பீடித் தொழிலாளர் சம்மேள னத்தின் சார்பில் செவ்வா யன்று (பிப்.14) எழும்பூர் ராஜரத்தினம் திடல் அருகே இருந்து கோட்டை நோக்கி பேரணி நடைபெற்றது. இப்பேரணியை தொடங்கி வைத்து சிஐடியு மாநிலப் பொதுச் செயலா ளர் அ.சவுந்தரராசன் பேசு கையில், அரசுத்துறையில் பணியாற்றும் கடைநிலை ஊழியருக்கு வழங்கும் ஊதி யத்தை அனைத்து தொழிலா ளர்களுக்குமான குறைந்த பட்ச ஊதியமாக நிர்ண யிக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமே நகர்ப்புற வறுமையை ஓரளவு குறைக்க முடியும் என்றார். 2010 ஜூன் மாதம் நடை பெற்ற சட்டமன்ற கூட்டத் தில் பீடித்தொழிலாளர்க ளின் பிரச்சனையை எழுப் பியபோது, ஊதிய உயர்வு அளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக அமைச் சர் கூறினார். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று குற்றம் சாட் டிய சவுந்தரராசன், இறுதி அரசாணையை வெளியிடு வதோடு, பின்தேதியிட்டு ஊதியத்தை வழங்க வேண் டும் என்றும் வலியுறுத்தினார். பீடித் தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி செலுத்துகின்றனர். எனவே, அத்தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 500 ரூபாய் ஓய்வூ தியம் வழங்க வேண்டும் என் றும் சவுந்தரராசன் கேட்டுக் கொண்டார். பேரணிக்கு சம்மேள னத் தலைவர் எம்.பி.ராமச் சந்திரன் தலைமை தாங்கி னார். நிர்வாகிகள் ஆர். மோகன், கே.எஸ்.நாதன், கே.துரைசாமி, எஸ்.பாப்பூ, டி.ஆர்.பலராமன், எஸ்.சி. மாசிலாமணி, பி.காத்தவரா யன், சிஐடியு மாநில நிர் வாகிகள் எஸ்.அப்பனு, கே. திருச்செல்வன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். சிஐடியு துணைப் பொதுச் செயலாளர் ஆர்.கருமலை யான் பேரணியை நிறைவு செய்து பேசினார்.

Leave A Reply

%d bloggers like this: