கிராமப்புற சாலைகள்: மாநில அரசே பொறுப்பு ஜமுய், பிப்.14- மத்திய அரசின் திட்டங் களான பிஎம்ஜிஎஸ்ஒய் மற் றும் எம்என்ஆர்இஜிஏ திட் டங்களின் கீழ் அமைக்கப் பட்டுள்ள சாலைகளின் தரம் குறித்து மத்திய கிரா மப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அதிருப்தி தெரிவித்தார். பீகாரில் மட்டுமல்ல தேசத்தின் பல பகுதி களிலும் இதே நிலைமை தான் என்று அவர் பத்திரி கையாளர்களிடம் தெரி வித்தார். கிராமப்புற சாலை களைப் பராமரிப்பது மாநில அரசுகளின் பணியாகும். மோசமான சாலைகள், அவை அமைக்கப்பட்ட விதத்தையும் அதைப் பரா மரிக்கும் முறையைப் பற்றி யும் கதைகதையாய்ச் சொல் கின்றன. தரமான சாலைகள் அமைக்கப்பட வேண்டும், அவை முறையாகப் பரா மரிக்கப்பட வேண்டும் என் பதற்காக மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் துறைகள் அவற்றை முறையாகப் பரா மரிக்க வேண்டும் என்று மக் கள் வலியுறுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார். கர்நாடக அமைச்சர் ஆச்சார்யா மரணம் பெங்களூர், பிப். 14- கர்நாடக மாநிலத்தின் மூத்த பாஜக தலைவரும் கர் நாடக உயர்கல்வி அமைச் சருமான வி.எஸ்.ஆச்சார்யா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற் கும் போது மயங்கி, செவ் வாய்க்கிழமை மரணம டைந்தார். 71 வயது ஆச்சார்யா மயங்கிய நிலையில் மருத்து வமனைக்கு கொண்டு செல் லப்பட்டபோது இறந்தார் என அதிகாரிகள் கூறினர். அவருக்கு மனைவி, 4 மகன் கள், ஒரு மகள் உள்ளனர். அவருக்கு அஞ்சலி செலுத்த முதல்வர் சதானந்த கவுடா மருத்துவமனைக்கு சென் றார். ஆச்சார்யா சட்ட மேலவை உறுப்பினர். அவர் திட்டம் மற்றும் புள்ளியல், தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பத்துறை இலாக்கா பொறுப்பையும் கவனித்து வந்தார். மருத் துவரான ஆச்சார்யா, 1940ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி பிறந் தார். பாரதிய ஜனசங்கில் சேர்ந்து, அரசியலில் புகுந்த ஆச்சார்யா, 1968ம் ஆண்டு முதல் 1976ம் ஆண்டு வரை உடுப்பி நகராட்சித் தலை வராக இருந்தார். எடியூரப்பா அமைச்ச ரவையில் ஆச்சார்யா உள் துறை அமைச்சராக இருந் தார்.

Leave A Reply

%d bloggers like this: