கால்நடைத்தீவன ஊழல்: சிறப்பு நீதிமன்றத்தில் லாலு ஆஜர் ராஞ்சி: கால்நடைத்தீவன ஊழல் தொடர்பாக முன்னாள் பீகார் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதாதளத் தலைவருமான லாலுபிரசாத் யாதவ் செவ்வாய்க்கிழ மையன்று சிபிஐ சிறப்புநீதிமன்றத்தில் ஆஜரானார். சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்தது. 1992-95களில் ரூ.37.7 கோடியை சாய் பாசா கருவூலத்திலிருந்து முறைகேடான வகையில் பெற்றுக்கொண்ட குற்றச்சாட் டில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 313ன் கீழ் லாலு பிரசாத் யாதவின் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டது. ராஞ்சி மற்றும் பாட்னா உள்பட 6 கால் நடைத்தீவன ஊழல் வழக்குகளில் லாலு பிரசாத் யாதவ் மீது குற்றம் சாட்டப்பட் டுள்ளது. 2006ம் ஆண்டு கால்நடைத்தீவன ஊழ லுடன் தொடர்புடைய வருமானத்திற்கு அதிகமான சொத்துக்குவிப்பு வழக்கில் லாலு பிரசாத் யாதவ் விடுதலை செய் யப்பட்டார். ரூ.950 கோடி மதிப்புள்ள கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் 300க்கும் அதிகமா னோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கு 1996 முதல் நடைபெற்று வருகிறது. பின்னர் மற்றொரு முன்னாள் பீகார் முதல்வர் ஜெகனாத் மிஸ்ராவின் வாக்கு மூலமும் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக் கில் முக்கிய குற்றவாளியான ஆர்.கே. ரானாவின் வாக்குமூலமும் பதிவு செய்யப் பட்டது.

Leave A Reply

%d bloggers like this: