hமன்வெல்த் விளையாட்டு ஊழல் 58 வழக்குகளில் விசாரணை புதுதில்லி, பிப். 14 – 2 ஆண்டுகளுக்கு முன்னர், தில்லி யில் நடந்த காமன்வெல்த் விளையாட் டுப் போட்டிக்காக நடந்த திட்டங்க ளில் 58 வித ஊழல்கள் நடந்துள்ளதாக வும் இதுதொடர்பாக மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல்முறையாக காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி, 2010ம் ஆண்டு தலைநகர் தில்லியில் நடந்தது எனப் பெருமைப்பட்டா லும், அந்தப் போட்டியில் பலநூறு கோடி ரூபாய் முறைகேடு நடந்து, 58 ஊழல் வழக்குகளை மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை செய்கிறது என்ற அவலமும் உள்ளது. ஊழல்கள் பட் டியல் போட முடியாத வகையில் உள்ளன. போட்டி முடிவு களை பார்வையாளர்களுக்கு தெரி விக்கும் போர்டுகள் வாங்கியதில் ஊழல், குளிரூட்டி சாதனங்கள், ஸ்டே டியக் கட்டுமானம், பந்தய அரங்கம், நடைபாதை மேம் பாலங்கள், பயணி கள் நிற்பதற்கு பஸ் நிறுத்த தகடுகள் பொருத்துதல், பணியாளர்கள் அமர்த் துதல், காப்பீடு ஆலோசகர் நிய மித்தல், வேலை ஆட்கள் புரோக்கர் நியமனம் என எல்லா செயல் பாடுகளி லும் ஊழல்கள் தலை விரித்தாடின. விஐபி அனுமதி அட்டைகள்விற்றல், முதலுதவி பெட்டிகளை வாங்கியதில் முறை கேடு, மருத்துவப் பொருட்கள், அன்பளிப்பு பெட்டிகள், பல் வேறு கருவிகளை வாடகைக்கு எடுத்தல் என காமன்வெல்த் விளையாட்டுப் போட் டியின்போது சுரேஷ் கல்மாடி தலை மையிலான விளையாட்டு அமைப்புக் குழுவும், விளையாட்டுத்துறை அமைச்சகமும் ஊழலில் விளையாடின. இந்த ஊழல் பட்டியல் விவரங் களை தகவல் அறியும் உரி மைச் சட் டத்தில் பிடிஐ தாக்கல் செய்த மனு வுக்கு மத்திய ஊழல் தடுப்பு ஆணை யம் பதிலளித்திருந்தது. மொத்தம் நடைபெற்ற ஊழல்களில் 24 ஊழல் கள் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சகத்தை சார்ந்த தாக இருந்தது. 9 ஊழல்கள் விளை யாட்டு அமைப்புக் குழுவைச் சார்ந்த தாகவும் 11 ஊழல் கள் நகர்ப்புற மேம் பாட்டுத்துறையைச் சார்ந்ததாகவும் தலா 3 ஊழல்கள் தில்லி பெருநகர கார்ப்பரேஷன் (எம்சிடி), தேசிய தலைநகர் தில்லி நிர்வாகம் (ஜிஎன் சிடிடி) சார்ந்ததாகவும் இருந்தன. புவி அறிவியல் மற்றும் என்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் (இஐஎஸ்) மேற் கொண்ட தலா ஒரு பணி ஊழல் குறித் தும் விசாரணை செய்யப்படுகிறது. தில்லி மேம்பாட்டு ஆணைய மனைப்பகுதிகளுக்கு 11 ஆயிரம் குளிரூட்டிகள் வாங்கியதில் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள் ளது. தில்லியில் காமன்வெல்த் விளை யாட்டுப் போட்டி 2010ம் ஆண்டு அக் டோபர் 3ம்தேதி முதல் 14ம்தேதி வரை நடைபெற்றது. ஊழல் முறைகேடுகளை கண்டறி வது குறித்து 2010ம் ஆண்டு அக்டோ பர் மாதம், முன்னாள் தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அலுவலக தலைவர் வி.கே.சுங்லு தலைமையி லான உயர்மட்டக்குழுவை, பிரதமர் மன்மோகன் சிங் நியமித்தார். சுங்லு குழு அளித்த அறிக்கையை பாதுகாப் புத்துறை அமைச்சர் ஏ.கே.அந் தோணி தலைமையிலான அமைச் சர்கள் குழு ஆய்வு செய்கிறது. கல் மாடி மற்றும் இதர நபர்கள் மீது பொருட்கள் விலையைக் காட்டி லும், கூடுதல் ரூபாயில் பொருட்களை வாட கைக்கு எடுத்து, அரசுக்கு இழப்பு ஏற் படுத்திய முறைகேடு குற்றச்சாட்டு உள்ளது. (பிடிஐ)

Leave A Reply