கரும்பு விவசாயிகள் மாவட்டத் தலைநகரங்களில் மறியல் டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் விலை வழங்க கோரிக்கை திருவண்ணாமலை, பிப். 14 – டன் கரும்புக்கு 3 ஆயி ரம் விலை வழங்க வேண் டும், வெட்டுக் கூலியை ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கரும்பு விவசாயி கள் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். பல் வேறு நெருக்கடிகளை தாங் கிக் கொண்டு பயிர்சாகுபடி யில் ஈடுபட்டு வரும் விவ சாயிகளை தற்போது மின் தடை கடும் அவதிக்குள் ளாக்கி வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் கரும்பு விவ சாயிகள், தங்களின் அடிப் படை பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த மறியல் போராட்டத்தை நடத்தினர். தமிழகம் முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் நடத்தப்பட்ட இந்த மறியல் போராட்டத்தில் 5 ஆயிரத் திற்கும் மேற்பட்ட விவசாயி கள் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட விவசா யிகளை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோட்டில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலை வர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமை தாங்கி னார். அரியலூரில் நடை பெற்ற மறியல் போராட்டத் திற்கு தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநில துணை தலைவர் கே.முக மதுஅலி தலைமை தாங்கி னார். மதுரையில் நடை பெற்ற மறியல் போராட்டத் திற்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் என். பழனிச்சாமி தலைமை தாங்கினார். திருவண்ணாமலையில் நடைபெற்ற மறியல் போராட் டத்திற்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டி.ஏழுமலை தலைமை தாங்கினார். விழுப்புரத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலை வர் ஆர்.ராமமூர்த்தி எம்.எல்.ஏ தலைமை தாங்கி னார். நாமக்கல்லில் நடை பெற்ற மறியல் போராட்டத் திற்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணை தலைவர் எ°.நல்லாகவுண்டர் தலைமை தாங்கினார். நெல்லை சிவகிரியில் நடைபெற்ற மறியலுக்கு தமிழ்நாடு கரும்பு விவசா யிகள் சங்கத்தின் மாநிலத் துணை செயலாளர் ஏ.எம். பழனிச்சாமி, கடலூரில் நடைபெற்ற மறியலில் தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணை தலைவர் எ°.காமராஜ் ஆகி யோர் தலைமை தாங்கினர். அதேபோல், காஞ்சிபுரத் தில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு தமிழ் நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் எ°.பா°கரன், தஞ்சையில் நடைபெற்ற மறியலுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் சாமி. நடராஜன் ஆகி யோர் தலைமை தாங்கினர்.

Leave A Reply

%d bloggers like this: